சர்வதேச விண்வெளி நிலையத்தில் 3 புதிய சாதனங்களை பொருத்திய விஞ்ஞானிகள்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2017      உலகம்
nasa 2017 1 8

நாசா : சர்வதேச விண்வெளி நிலையத் தின் மின் இணைப்புக்காக நாசா வீரர்கள் இருவர் விண் நடை பயின்று 3 புதிய சாதனங்களை வெற்றிகரமாக பொருத்தினர்.
இது குறித்து நாசா விஞ்ஞானிகள் தங்களது வலைப்பூவில் எழுதியுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:

கமாண்டர் ஷேன் கிம்புரோ மற்றும் விண்வெளி ஓட பொறியாளர் பெக்கி விட்சன் இருவரும் மின் இணைப்புகளை மேம்படுத்துவதற்கான இரு பணிகளில் ஒன்றை விண் நடை பயின்று முடித்துள்ளனர். மொத்தம் ஆறரை மணி நேரம் நீடித்த இந்த விண் நடையின்போது, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெளியே மின் இணைப்புக்கான 3 புதிய சாதனங்களையும், லித்தியம் பேட்டரிகளையும் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு மின் இணைப்பு வழங்கி வந்த ஹைட்ரஜன் பேட்டரிகளின் ஆயுட்காலம் முடிந்ததை அடுத்து, லித்தியம் பேட்டரிகள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் இரண்டாவது கட்டப் பணிக்காக வரும் 13-ம் தேதி அன்று நாசா விண்வெளி வீரரகள் மீண்டும் விண் நடை மேற்கொள்கின்றனர்.


இதை ஷேர் செய்திடுங்கள்: