முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூபாய் நோட்டு ஒழிப்பு ஏன்? பிரதமர் மோடி விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : கருப்புப் பண ஒழிப்பு, லஞ்சம், ஊழல் போன்றவற்றுக்கு எதிரான நீண்டகால நடவடிக்கையின் ஒரு பகுதிதான் ரூபாய் நோட்டு ஒழிப்பு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக் குழுக் கூட்டத்தின் முடிவில்  நிறைவுரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றுவதில் மத்திய அரசு கடமையாகக் கொண்டு செயலாற்றி வருவதாகக் கூறினார்.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் லஞ்சம், ஊழல், கருப்புப் பணப் பதுக்கல் போன்றவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதற்கான நீண்ட கால நடவடிக்கையின் ஒருபகுதிதான் ரூபாய் நோட்டு ஒழிப்பு என்றும் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய நிதி ஆதாரங்கள் மற்றும் செலவினங்களை வெளிப்படைத்தன்மையாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். எத்தனையோ இடர்பாடுகளுக்கு மத்தியிலும் நாட்டு மக்கள் தனது வேண்டுகோளை ஏற்று அதன்படி செயல்படுவதை தான் பெரிதும் பாராட்டுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்