முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 : கோரி ஆண்டர்சன் அதிரடியில் நியூஸிலாந்து வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2017      விளையாட்டு
Image Unavailable

பே ஓவல் : பே ஓவலில்  நடந்த 3வது இறுதி டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் கோரி ஆண்டர்சன்  41 பந்துகளில் 10 சிக்கர்களை விளாசி 91 ரன் குவித்தார். இதனால் நியூசிலாந்து அந்த போட்டியில் வென்று  வங்க தேச அணிக்கு எதிரான டி-20 தொடரை 3-0 ஆட்ட கணக்கில் கைப்பற்றியது.

நியூசிலாந்து - வங்க தேசம் அணிகள் இடையே 3வது இறுதி டி-20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. பே ஓவலில்  நடந்த இந்த குறுகிய ஓவர் கொண்ட ஆட்டத்தில்  
முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை எடுத்தது. அந்த அணியில் கோரி ஆண்டர்சன் அதிரடியாக ஆடி  41 பந்துகளில் 94 ரன் குவித்தார்.

அவர் டி-20 போட்டியிலும் அதி வேக சதம்  அடித்து சாதனை படைப்பார் என எதிர் பார்க்கப்பட்டது.  ஆனால் அதற்குள் போட்டி முடிந்து விட்டது.கோரி ஆண்டர்சன் ஒருநாள் போட்டிகளில் 2014-ல் 36 பந்துகளில் சதம் அடித்தார், இருப்பினும் நேற்று ஆடிய அதிரடி ஆட்டத்தில் 10 சிக்சர்கள் அடித்து  டி-20ல் அதிக சிக்சர் அடித்த சாதனையை அவர் நிகழ்த்தினார்.

முன்னதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 57 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்தார்.

195 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. சவுமியா சர்க்கார் அதிகபட்சமாக 42 ரன்களையும் ஷாகிப் அல் ஹசன் 41 ரன்களையும் எடுத்தனர். இதன் மூலம் தோல்வி அடைந்து வங்கதேசம் டி20 தொடரிலும்ஒரு வெற்றியும் பெற முடியாமல் தோல்வியுடன் நாடு திரும்புகிறது.தொடரை 3-0 என்று இழந்து வங்கதேசம் நியூஸிலாந்து தொடரில் முற்றிலும் வெறும் கையுடன் நாடு திரும்புகிறது வங்க தேச அணி. நேற்றைய ஆட்டத்தில்  அதிரடியாக ஆடி 94 ரன் குவித்த  கோரி  ஆண்டர்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்