முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய எதிர் காலத்திற்கு பிரதமர் மோடி நடவடிக்கை - பாராளுமன்றத்தை முடக்க வழி தேடும் ராகுல் ; ஜெட்லி பாய்ச்சல்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி :  இந்தியாவின் எதிர் காலத்திற்கான நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுக்கிறார். ஆனால் ராகுல் காந்தி பாராளுமன்றத்தை முடக்குவதற்கான வழிகளை தேடுகிறார் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி குற்றம் சாட்டினார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று தலைநகர் டெல்லியில் கூறியதாவது,

தூய்மையான பொருளாதாரத்தை உருவாக்க, பிரதமர் மோடி நவீன தொழில் நுட்ப நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனால் எதிர் கட்சி தலைவரான ராகுல் காந்தி  பழைய ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என்ற அரசின் முடிவை எதிர்த்து பாராளுமன்றத்தை முடக்க வழிகள் தேடுகிறார்.

மத்திய அரசின் ரூபாய் நோட்டு முடிவை நாட்டின் முக்கிய தேசியக்கட்சியான காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்த்து வருகின்றன.அரசின் முடிவால் நாட்டின் பொருளாதாரம் மந்தமடையும் எச்சரிக்கப்பட்டது. ஆனால்  பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பிற்கு பின்னர்  கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் மட்டும் மறை முக வரி வருவாய் 23 சதவீதம் அதிகரித்தது. அந்த மாதம் மட்டும் ரூ67ஆயிரத்து 358 கோடி வசூல் ஆனது. 2016ம் ஆண்டு ஏப்ரல்-நவம்பர் மாத கால கட்டத்தில் மட்டும் மொத்தம் ரூ7.53லட்சம் கோடி மறைமுக வரி வசூல் ஆகியுள்ளது. எனவே ரூபாய் நோட்டு முடிவால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை..

பழைய ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடி அரசின் அறிவிப்புக்கு பொது மக்கள் மிகப்பெரும் ஆதரவை அளித்துள்ளனர். பிரதமர் மோடி எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் எதிர் கட்சிகளின் செயல்பாடுகளுக்கும் பெரும் வேறுபாடு இருப்பதை காணலாம். இவ்வாறு நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதியன்று ரூ500,ரூ1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

கறுப்புப்பணம், வரி ஏய்ப்பு, ஊழல், தீவிரவாதத்திற்கு நிதி செல்லுதல் ஆகியவற்றை முற்றிலும் ஒடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.பிரதமரின் இந்த அறிவிப்புக்கு பின்னர்  நாடு முழுவதும் மக்கள் தங்களின் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. மக்கள் தினமும் பல மணி நேரம் வங்கிகளில் காத்து கிடக்கிறார்கள். அப்பாவி, நடுத்தர மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்த கூட பணம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். வங்கிகளில் நீண்ட வரிசைகளில் நின்ற 100பேர் பரிதாபமாக உயிரிந்துள்ளனர். மக்களை வாட்டும் ரூபாய் நோட்டு முடிவை அரசு திரும்ப பெற வேண்டும் என பிரதான எதிர் கட்சியான காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய எதிர் கட்சிகள்  தொடர்ந்து வலியுறுத்துகின்றன. அந்த கட்சிகள் பாராளுமன்றத்தையும் ரூபாய் நோட்டு விவகாரத்தில்  முடக்கி வருகின்றன. இந்த கட்சிகள் கறுப்பு பணத்திற்கு துதி பாடும் எதிர் கட்சிகள் என பிரதமர் மோடி  நேற்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்