முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்டத்தில் விலையில்லா வேட்டி சேலைகள்: அமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2017      சேலம்

சேலம்.

சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சியில் பொங்கல் பண்டியினை ஒட்டி தமிழக அரசின் விலையில்லா வேட்டி மற்றும் சேலைகளை  பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி   வழங்கினார்கள். இவ்விழா கலெக்டர் வா.சம்பத், .,  தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா வேட்டி மற்றும் சேலைகளை வழங்கி  அமைச்சர்  பேசியதாவது.

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்படுகிறது.  இத்திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் 8,14,200 பேர் பயனடைகின்றனர். எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 69,580 நபர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைகின்றனர்.

மேலும், பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை நாளை  தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, சேலம் மாவட்டம் முழுவதும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்தரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படவுள்ளது.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா  கடந்த 5 ஆண்டுகளில் தமிழக மக்களின் நலன் கருதி எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி உள்ளார்கள். குறிப்பாக எடப்பாடி தொகுதியை பொறுத்தவரை குடிநீர் வசதி, சாலைவசதி, மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதய தெய்வம் அறிவித்த அனைத்து திட்டங்களும் எடப்பாடி பகுதி மக்களுக்கு முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், சேலம் மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை திட்டத்தின் மூலம் 1,64,481 நபர்கள்  பயனடைந்துள்ளனர். எடப்பாடி வட்டத்தில் 8,670 நபர்கள் பயனடைந்துள்ளனர். இன்று நடைபெற்ற விழாவில் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 7 நபர்களுக்கும், நகர திட்ட பட்டா 12 நபர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை 6 நபர்களுக்கும், ஆதரவற்ற விதவை சான்று 4 நபர்களுக்கும், சாலை விபத்து நிவாரணம் 4 நபர்களுக்கும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு வழங்கி வந்த ஆதரவை பொதுமக்கள் தொடர்ந்து வழங்கி ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு  பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர்  பேசினார். இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் பால் பிரின்ஸிலி ராஜ்குமார், வட்டாட்சியர் சண்முகவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்