முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஞ்சி சிங்கவரம் அரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்க வாசல் திறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2017      விழுப்புரம்

செஞ்சி,

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செஞ்சி சிங்கவரம் அரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்க வாசல் திறப்பு விழா ஞாயிறு விடியற்காலையில் நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செஞ்சியை அடுத்துள்ள சிங்கவரம் அரங்கநாதர் கோயில் பிரசித்தி பெற்ற தளமாகும். மலை மீது உள்ள இந்த கோயிலில் பள்ளி கொண்ட நிலையில் அரங்கநாதர்அருள்பாலித்து வருகிறார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீஅரங்கநாதர் ஞாயிறு விடியற்காலை 5.30 மணி அளவில் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது கூடியிருந்த ஆயிரகணக்கானபக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் முழங்கியவாறு அரங்கனை வழிபாடு செய்தனர். பின்னர் மலை பாதையில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கோயில் சார்பில் லட்டு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் அதிமுக செஞ்சி நகர செயலர் வி.ஆர்.பிரித்விராஜ், முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் அரங்க.ஏழுமலை, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் அன்பழகன், மேலாளர் மணி, முன்னாள் ஊராட்சி தலைவர் ரங்கநாதன், திருப்பணிக்குழுவினர் ஏழுமலை, குணசேகரன், இளங்கீர்த்தி உள்ளிட்ட ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை செஞ்சி காவல் துறை ஆய்வாளர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்