முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் பவுர்ணமி கோஆப்டெக்ஸ் தங்க மழை 220 பேருக்கு தங்க காசு பரிசு

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை

 

திருவண்ணாமலையில் உள்ள திருவூடல் தெருவிலுள்ள பவுர்ணமி கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பொங்கல் விற்பனையை முன்னிட்டு தங்க மழை பரிசு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விற்பனை மேலாளர் ராஜேந்திரன் கூறுகையில், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் சிறப்புறவும், புத்தம் புதிய வடிவமைப்பை சந்தை படுத்தும் விதமாகவும், ரொக்க விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் கோஆப்டெக்ஸ் நிறுவனம் தங்க மழை பரிசு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி வாக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள துணி ரகங்களுக்கும் ஒரு கூப்பன் வழங்கப்பட்டு, அந்த கூப்பனில் கேட்கப்படும் வினாக்களுக்கு தகுந்த பதில் கூறும் வாடிக்கையாளர்கள் தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். மொத்தம் 220 நபர்களுக்கு தங்க காசு பரிசளிக்கப்படும். இதன்படி முதல் பரிசாக 55 பேருக்கு 8 கிராம் தங்க காசும், 165 பேருக்கு 4 கிராம் தங்க காசும் வழஙகப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப புத்தம் புதிய வடிவில் கைத்தறி ரகங்கள் விற்பனைக்காக வந்துள்ளன. தொன்றுதொட்டு நடக்கும் இத்தொழில் நவீன உத்திகளை கையாண்டு அறிய வேலைவாய்ப்புகளுடன் எழில்கொஞ்சும் வண்ணங்களில் பட்டு ரக சேலைகள் கல்பதித்த சேலைகள் மற்றும் பருத்தி ரக சேலைகள், ஆர்கானிக் சேலைகள், லுங்கிகள், போர்வைகள், திரைச் சீலைகள், துண்டுகள், கைகுட்டைகள், வேட்டிகள் ரெடிமேட் சட்டைகள், ஜீன்ஸ், குர்த்தீஸ் போன்றவைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அனைத்து ரகங்களுக்கும் 30 சதவித சிறப்ப தள்ளுபடி உண்டு அரசு ஊழியர்கள் கடன் சலுகை வசதியும் உண்டு. விடுமுறை இல்லாமல் விற்பனை நிலையம் செயல்படும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago