முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை,

 

திருவண்ணாமலையில் தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பிரபுஜானகிராமன் தலைமை தாங்க மாவட்ட தலைவர் தாவுதீன் துணைத் தலைவர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிரணி செயலாளர் மீனா அனைவரையும் வரவேற்று பேசினார் மாநில பொதுச் செயலாளர் வே.குமரேசன் மாநில துணைத் தலைவர் கனிஷ்கர்ராவ் மாநில துணை செயலாளர் ம.புகழ் மாநில மாற்றுத்திறனாளி அமைப்பாளர் பாலகிருஷ்ணன் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பரசுராமன் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாநில செயலாளர் கோபி மாநில துணைப் பொதுச் செயலாளர் ராஜா மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் மாநில நிர்வாகக்குழு செயலாளர் மணிவண்ணன் மாநில துணை அமைப்பாளர் முத்து வடிவேல் மாநில செயற்குழு தலைவர் சந்திரசேகர் மாவட்ட மகளிர் ஒருங்கிணைப்பாளர் நதியா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆரம்ப கல்வி முதலே கணினி அறிவியல் பாடத்தை முக்கிய பாடமாக வருகிற கல்வியாண்டின் தொடக்கத்திலேயே கொண்டுவரவேண்டும். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமே 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புவரை கணினி அறிவியல் பாடம் முக்கிய பிரதான பாடமாக நடத்தப்பட்டு வருகிறது. இதனை அரசு பள்ளிகளிலும் கொண்டுவந்து ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வழிவகை செய்ய வேண்டும், 28 லட்சம் மாணவர்களுக்கு சமச்சீர் கல்வியில் 6ம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்புவரைஅச்சடிக்கப்பட்டு கணினி அறிவியல் பாடபுத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்படாமலும் கணினி அறிவியல் பாடத்தையும் செயல்படுததாமலும் நிறுத்திவைககப்பட்டள்ளது. தமிழகத்தை தவிர ஏனைய மாநிலங்களில் கணினி கல்வி கட்டாய கல்வியாக இணைக்கப்பட்டுள்ளது வரும் கல்வியாணடில் அரசு பள்ளி மாணவர்களுக்காக அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் பாடபுத்தகத்தை மாணவர்களுக்கு வழங்கி கணினி கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும். இதுவரை 39,019 பேர் கணினி அறிவியல் பிஎட் பாடத்தில் பட்டம் பெற்று வேலையின்றி தவித்துவரும் கணினி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாட திட்டத்தை கொண்டுவந்து பணிவாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும், தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோயர் கல்வித்துறையில் தனி கவனம் செலுத்த வேண்டும், மேலும் கணினி அறிவியல் பாடத்தை தமிழகததில் கொண்டுவர அரசு பள்ளிகளின் தரத்தை தனியார் பள்ளியின் தரத்திற்கு மேலாக கொண்டுவரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள், கணினி ஆசிரியர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை த.ராகசுதா தொகுத்து வழங்கினார். முடிவில் மாவட்ட பொருளாளர் ஹரிகுமார் நன்றி கூறினார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago