முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு ஆணையாளர் சந்தீப் நந்தூரி பாராட்டு

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      மதுரை
Image Unavailable

 மதுரை-

தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கும், மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை நடத்திய கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் ஆணையாளர்  சந்தீப் நந்தூரி   பாராட்டி பரிசுகள் வழங்கினார். 

திருச்சியில் நடைபெற்ற 62வது தேசிய அளவிலான சூப்பர் சீனியர் 19 வயதிற்குட்பட்டோர்க்கான கேரம் போட்டியில் ஒற்றையர் பிரிவில் மதுரை மாநகராட்சி கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் செல்வி. ஐ.அம்சவர்த்தினி கலந்து கொண்டு முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும் குழு போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார். மேலும் மாநில அளவில் நடைபெற்ற 58 வது தமிழ்நாடு சப் ஜீனியர் பிரிவில் 12 வயதிற்குப்பட்டோர்க்கான கேரம் போட்டியில் அதே பள்ளியை சேர்ந்த 7 ஆம் வகுப்பு மாணவி செல்வி. எச்.அஸ்விகா கலந்து கொண்டு முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.


 மேலும் மத்திய அரசின் மனித வளமேம்பாட்டுத் துறை நடத்திய் "என்னைக் கவர்ந்த சுற்றுலாத்தலம்" என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் மதுரை மாநகராட்சி பொன்முடியார் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் செல்வி.ஜி.சுவேதா என்ற மாணவி கலந்து கொண்டு  மாநில அளவில் முதலிடமும், திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி நடத்திய "பேரிடர் மேலாண்மை" என்ற தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடமும் பெற்றுள்ளார். மேலும் மனித வள மேம்பாட்டுத் துறை நடத்திய ஓவியப் போட்டி

யில் அதே பள்ளியை சேர்ந்த 7 ஆம் வகுப்பு பயிலும் செல்வி. ஜே.சரண்யா என்ற மாணவி; மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.  கேரம், கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஆணையாளர்  சந்தீப் நந்தூரி  பாராட்டி பரிசுகளை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் செ.சாந்தி, மாநகராட்சி கல்வி அலுவலர் திருமதி.சரஸ்வதி, கண்காணிப்பாளர் ரமேஷ், பள்ளி தலைமை ஆசிரியைகள்  முருகேஸ்வரி,  .கல்யாணி,  பேபிசரோஜா, பயிற்சியாளர்  னிவாசன் உட்பட வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்