வங்கிக் கணக்கு வைத்திருப்போர் அடுத்த மாதத்திற்குள் பான் கார்டை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவு

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      இந்தியா
pan card

 புதுடெல்லி  - வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான்  அட்டைகளை, அடுத்த மாதம் 28-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  நாடு முழுவதும் பெருகிவரும் லஞ்சம், ஊழல் மற்றும் கருப்புப் பண பதுக்கலுக்கு எதிராக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து மத்திய அரசு அண்மையில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.  இதன் தொடர்ச்சியாக, மேலும் பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் அடுத்த மாதம் 28-ம் தேதிக்குள் பான்  அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தக் காலக்கெடுவுக்குள் பான்  அட்டைகளை அளிக்காதவர்கள் வருமான வரிச் சட்டத்தின்படி, பார்ம்-60 எனப்படும் படிவம் 60-ஐ பூர்த்தி செய்து வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஜன்தன் கணக்குக்கு  இது பொருந்தாது :
வரி ஏய்ப்பை தடுக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. இதற்காக, வருமான வரிச் சட்டத்தில் விதிமுறைகள் திருத்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் பூஜ்யம் இருப்பு எனப்படும் அடிப்படை சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தாது என்றும், மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: