தென்காசி,
மதுரை எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கில், மாநில அளவிலான ஒலிம்பிக் 2020 மற்றும் 2024-ஐ நோக்கிய தேசிய அளவிலான ஒலிம்பிக் தேர்வுப் போட்டி நடைபெற்றது இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை உட்பட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் 14 வயது பிரிவில் பாரத் மாண்டிசோரி மெட்ரிக் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவன் ஹம்சவர்தன், ஒன்பதாம் வகுப்பு மாணவன் சம்புருதீன் முஸ்தபா ஆகிய இருவரும் தென் மாநில அளவிலான ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு தென்மாநில அளவிலான ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களைப் பள்ளித்தாளாளர் மோகனகிருஷ்ணன், முதன்மை முதல்வர் காந்திமதி மோகனகிருஷ்ணன், முதல்வர் உஷா ரமேஷ் ஆகியோர் பாராட்டினர்