முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெருசலேம் லாரி தாக்குதலை நடத்தியவர் ஐ.எஸ் ஆதரவாளர்: இஸ்ரேல் பிரதமர் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

ஜெருசலேம்  - ஜெருசலேம் லாரி தாக்குதலை நடத்தியவர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

3 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல் நாட்டின் தலைநகரான ஜெருசலேத்தில் ராணுவப்படையைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் பஸ்சில் ஏறுவதற்கு தயாராக இருந்த போது திடீரென அவர்களுக்கு மத்தியில் லாரி ஒன்று புகுந்தது. இதில் 3 பெண் வீரர்கள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் 20 வயது மிக்கவர்கள். மேலும் இந்த தாக்குதலில் 14 பேர் காயம் அடைந்தனர்.

திட்டமிட்ட தாக்குதல்
அப்போது ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்திய அந்த லாரியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் லாரி டிரைவர் உயிரிழந்தார். அவர் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் எனக்கூறப்படுகிறது.

ஐ.எஸ் ஆதரவாளர்
இந்நிலையில், ஜெருசலேம் லாரி தாக்குதலை நடத்தியவர் ஒரு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.  முன்னதாக, தாக்குதல் நடந்த இடத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் அவிக்டோர் லிபெர்மேனுடன் பிரதமர் நெதன்யாகு பார்வையிட்டார்.  இதனையடுத்து அவரது அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், குற்றவாளி ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர் என்பதற்கான அறிகுறிகளே தெரிகிறது” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago