முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

74-வது கோல்டன் குளோப் விருது: `லா லா லாண்ட்' படம் 7 விருதுகளை வென்று சாதனை!

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      சினிமா
Image Unavailable

லாஸ் ஏஞ்சல்ஸ்  - உலகளவில் பிரபலமான கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் 7 விருதுகளை வென்று லாலா லாண்ட் படக்குழு சாதனை படைத்துள்ளது.

கோல்டன் குளோப் விருது
உலகளவில் பிரபலமான கோல்டன் குளோப் விருது விழா அமெரிக்காவின் பெவர்லி ஹில்சில் நடைபெற்று வருகிறது. 2017ம்  ஆண்டுக்கான 74வது கோல்டன் குளோப் விருது விழாவை ஜிம்மி பாலோன் துவக்கி வைத்தார். இதில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட `லா லா லாண்ட்' படம் 7 விருதுகளை வென்றுள்ளது. இதில் கோல்டன் குளோப் சிறந்த நடிகராக ரியான்  கோஸ்லிங்கும், சிறந்த நடிகையாக எம்மா ஜோன்சும் தேர்வு செய்யப்பட்டனர். இருவரும் `லாலா லாண்ட்' என்ற இசை மற்றும்  காமெடி கலந்த படத்தில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

7 பிரிவுகளிலும் விருது
`லாலா லாண்ட்' படக்குழு மொத்தமாக பரிந்துரை செய்யப்பட்ட 7 பிரிவிலும் கோல்டன் குளோப் விருதை வென்று சாதனை  படைத்துள்ளது. லாலா லாண்ட் வென்றுள்ள விருதுகள் பின்வருமாறு:-
1) கோல்டன் குளோப் சிறந்த படம் - லாலா லாண்ட்.
2) கோல்டன் குளோப் சிறந்த இயக்குநர் - டேமியன் சேஷல்.
3) கோல்டன் குளோப் சிறந்த திரைக்கதை - டேமியன் சேஷல்.

4) கோல்டன் குளோப் சிறந்த நடிகர் - ரியான் கோஸ்லிங்.
5) கோல்டன் குளோப் சிறந்த நடிகை - எம்மா ஸ்டோன்.
6) கோல்டன் குளோப் சிறந்த இசையமைப்பாளர் - ஜஸ்டின் ஃகுர்விட்ஸ்.
7) கோல்டன் குளோப் சிறந்த பாடலாசிரியைர் - பென்ஞ் ஹாசக், ஜஸ்டின் பால்.
மேலும் இதர  முக்கிய படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் விருதுகள் வருமாறு:-
1) கோல்டன் குளோப் சிறந்த அனிமேசன் படம் - சூடோபியா.
2) கோல்டன் குளோப் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் - எல்லி- பிரான்ஸ்.
3) கோல்டன் குளோப் சிறந்த துணை நடிகை- வியோலா டேலிஸ் பென்சஸ்.
4) கோல்டன் குளோப் சிறந்த துணை நடிகர் ஆரோன் டெய்லர் -ஜான்சன், நாக்டர்னல் அனிமல்ஸ்.
5) கோல்டன் குளோப் சிறந்த தொலைக்காட்சி தொடர் தி க்ரவுண்.
6) கோல்டன் குளோப் சிறந்த தொலைக்காட்சி நடிகர் - பில்லி பாப் தோர்டன் - கோலியத்.
7) கோல்டன் குளோப் சிறந்த தொலைக்காட்சி நடிகை க்ளேய்ர் ஃபாய் - தி க்ரவுண்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago