கோவில்பட்டி இலக்கிய உலா சார்பில் தேசிய சின்னங்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டி

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      தூத்துக்குடி
kvp 1

கோவில்பட்டி

 

கோவில்பட்டி இலக்கிய உலா...மற்றும் மேரி கார்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு அருள்மிகு பூவனநாத சமேத செண்பகவல்லி அம்மன் திருகோவில் வளாகத்தில் வைத்து தேசிய சின்னங்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டியை நடத்தியது.

 

நிகழ்விற்கு அம்பாள் அரிமா சங்கத் தலைவர் பிரான்ஸிஸ் ரவி தலைமை வகித்தார் டைனமிக் அரிமா சங்கத் தலைவர் டாக்டர் சங்கர நாராயணன் முன்னிலை வகித்தார். இலக்கிய உலா ரவீந்தர் வரவேற்றார். புதினெட்டு பள்ளிகளை சார்ந்த ஆயிரத்து எழுநூற்று முப்பத்தி எட்டு மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

நிகழ்வில் பணிநிறைவு தமிழாசிரியர் ஆறுமுகம் இலக்கிய உலாவின் புரவலராக இணைத்துக் கொண்டார். சீனா தொழிலதிபர் சாங்டேங், சென்ட்ரல் அரிமா சங்க முன்னாள் தலைவர் எட்டப்பன், இலக்கிய உலா இயக்குனர்கள் பிரபாகர். நூலகர் பூல்பாண்டி. விஸ்வகர்ம உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பிரபு. நூலகர் பூல்பாண்டி. பி. எஸ். ஏன். ஏல். இளநிலைப் பொறியாளர் சவரிராஜ் மிட்டவுண் அரிசி சங்கத்தின் சார்பாக சரவணச்செல்வன் கோவில்பட்டி வணிகவியல் மன்ற இயக்குநர் சந்தோஸ்ராம் நாடார் மேல் நிலைப் பள்ளி ஆசிரியர் மணிகண்டன் நாடார் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் ராதாகிரு~;ணன். பூபதி ராமசாமி ரோட்டரி மாவட்ட சாலை பாதுகாப்பு தலைவர் முத்துச்செல்வம் கோவில் எழுத்தர் இராமலிங்கம். ஆசிரியர் வரகவி முருகேசன். மனித நேய உதவும் கரங்கள் நிறுவனர் இந்தியன் பிரகா~; உட்பட ஆசிரியர்கள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டார். மேரி கார்மென்ட்ஸ் அரிமா சுதாகர் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: