முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நல்ல நேரம் பொறந்தாச்சு: பிரியங்கா சோப்ரா நெகிழ்ச்சி

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      சினிமா
Image Unavailable

லாஸ் ஏஞ்சலஸ்-  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்ற 'கோல்டன் குளோப்' விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனக்கு 'நல்ல நேரம்' பிறந்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெற்ற 2017-ம் ஆண்டுக்கான 74-வது கோல்டன் குளோப் விருது விழாவை ஜிம்மி பாலோன் துவக்கி வைத்தார். இதில் சிறந்த படமாக தேர்வு  செய்யப்பட்ட `லா லா லாண்ட்' படம் 7 விருதுகளை வென்றது.

தொலைக்காட்சி தொடர்
பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்ற வண்ணமயமான இவ்விழாவில், தொலைக்காட்சி தொடர்கள் உள்ளிட்ட பிற பிரிவுகளுக்கும் விருதுகள் அளிக்கப்பட்டன. சிறந்த தொலைக்காட்சி தொடர் நடிகராக தேர்வு செய்யப்பட்ட பில்லி பாப் தார்ன்ட்டான் என்பவருக்கு இவ்விருதினை ஹாலிவுட் நடிகர் ஜெப்ரி டீன் மோர்கன் மற்றும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் இணைந்து வழங்கினர்.

நடிகை என்ற முறையில்...
பாலிவுட் மற்றும் இந்திய சினிமா எல்லையை கடந்து 'குவாண்ட்டிக்கோ' தொடரில் தோன்றியதன் மூலம் அமெரிக்க மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ள பிரியங்கா சோப்ராவிடம் இவ்விழாவின்போது நிருபர்கள் சில கேள்விகளை முன்வைத்தனர். அமெரிக்காவின் பிரபலமான தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்திய நடிகை என்ற முறையில் என்ன கருதுகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா சோப்ரா, ‘நான் ஒரு நடிகை என்ற முறையில் எனது பணிக்கான இடம் எங்கே இருந்தாலும் அங்கு போக வேண்டும் என்றே நினைக்கிறேன்’ என்றார்.

நல்ல நேரம்
குவாண்ட்டிகோ தொடரின் மூலம் அமெரிக்க ரசிகர்கள் என்னை அங்கீகரித்துள்ளதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். 'பேவாட்ச்' (பிரியங்கா நடிக்கும் ஹாலிவுட் திரைப்படம்) உருவாகிவரும் விதத்தை எண்ணியும் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். எனக்கு இது நல்ல நேரம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கு முன்னரும் அமெரிக்காவில் நடைபெற்ற ஆஸ்கர் மற்றும் எம்மி விருதுகள் வழங்கும் விழாவிலும் பிரியங்கா சோப்ரா பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்