முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புழல் அருகே நூதன முறையில் நகை மோசடி கணவன் மனைவிக்கு போலீஸ் வலைவீச்சு

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      சென்னை

சென்னை அடுத்த புழல் புதிய லஷ்மிபுரம் இ.வி.ஆர். ராதாகிருணஷ்ணன் இவர் பால்வியாபாரி இவருக்கு 3மகன்கள் இவர்கள் தனிதனி வீடுகளிலில் ஒரே கம்பண்டில் வசித்து வருகிறார்கள் அதே கம்பெண்டில் நான்கு வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு களியாக இருந்த வீட்டை வாடகைக்கு விடுவதற்காக வீட்டு வாசலில் வாடகைக்கு விடப்படும் என விளம்பர பலகை மாட்டிருந்தார். இதை பார்த்த டிப்டாப் ஆசாமி ஒருவர் ஒரு பெண்ணுடன் வந்து ராஜலட்சுமிடம் வீடு வாடகைக்கு வேண்டும் என கேட்டார். அவர் தன் பெயர் சாய் ஜெகதீசன் என்றும் உடன் வந்தவர். தன் மனைவி சென்னா என்றும் 6வயது நந்தினி என்பவர் தன் மகள் என்றும் அறிமுகம் செய்துக்கொண்டார். தான் ஒரு இன்ஜினியர் என்றும் ஊட்டியில் வேலை செய்து வந்ததாகவும் ஊட்டில் சொந்த வீடு உள்ளதாகவும் சென்னைக்கு பணிமாற்றம் ஆனதால் வாடகைக்கு வீடு தேடி வந்ததாகவும் கூறி உள்ளார். இதை நம்பிய ராஜலட்சுமி அட்வான்ஸ் தொகை ரூ50 ஆயிரம் மாதம் 5ஆயிரத்தி 5நூறு ரூபாய் என்று பேசி வீட்டை வாடகைக்கு வீட்டார். அட்வன்ஸ் தொகை ரூ25ஆயிரத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதி பிறகு தருவதாக கூறியுள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் ராஜலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் நல்லவர்கள் போல் நடித்து பலகி உள்ளனர். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சென்னையில் தங்களது உறவினர் திருமணம் நடைபெறுகிறது. இதற்கு செல்ல நகைகள் இல்லை என் மனைவி சென்னா அணிந்திருந்த நகையை ஊட்டில் உள்ள சொந்த வீட்டில் பூட்டி வைத்துவிட்டு வந்துவிட்டோம் அதனால் தங்கள் நகைகளை கொடுத்தாள் திருமணத்திற்கு சென்றுவிட்டுவந்து திருப்பி கொடுவிடுகிறோம் என கேட்டனர். இதை நம்பி ராஜலட்சுமி தனது 6 பவுன் தங்க செயினையும் தனது மருமகளின் 2 சவரன் மதிப்பிலான தங்க வலையல்களையும் கொடுத்துள்ளார். மேலும் ராதாகிருஷ்ணனின் மகன் சசிகுமார் என்பவருடைய 1லட்சத்தி 25ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளையும் கொடுத்து அனுப்பினர். திருமணத்திற்கு சென்றவர்கள் வரவேயில்லை இந்த நிலையில் இவர்களை தேடி கொளத்தூரைச் சேர்ந்த இந்துமதி என்ற பெண் ஒருவர் சாய்ஜெயகதீஷனின் உறவினர் என்று வந்து சென்றுள்ளார். சமிபத்தில் இந்துமதி இவர்களை தேடி வீட்டிற்கு வந்த போது நடந்தவற்றை இந்துமதியிடம் கூறியுள்ளனர். அதற்கு அவர் திருமணம் ஏதும் நடக்கவில்லை அவர்கள் உங்களை ஏமாற்றிவிட்டனர். என கூறியதால் தாங்கள் மோசம் போது தெரியவந்தது. இந்த நூதன மோசடி சம்பவம் குறித்து ராதாகிருஷ்ணனின் மகன் சசிகுமார் புழல் போலிசில் புகார் செய்தார். குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் வழக்குபதிவு செய்து மயமான கணவன் மனைவியை வலைவீசி தேடி வருகிறார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago