முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராயலாநகரில் அழகு நிலையத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி பெண் ஊழியரிடம் நகை மற்றும் பணம் பறித்த 9 பேர் கைது

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      சென்னை

சென்னை, பூந்தமல்லி, நசரத்பேட்டை, நேதாஜி தெருயில் வசிக்கும் ராஜேஸ்வரி (36), ராமாபுரம், கோத்தாரி நகர், 2வது தெருவில் உள்ள பெண்கள் அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 28.12.2016 அன்று மாலை சுமார் 04.00 மணியளவில் மேற்படி அழகு நிலையத்திற்கு, 2 நபர்கள் சென்று, அங்கிருந்த ராஜேஸ்வரியிடம் தங்களுக்கு முடி அலங்காரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளனர். அதற்கு ராஜேஸ்வரி, இங்கு பெண்களுக்கு மட்டும்தான் அலங்காரம் செய்யப்படும் எனக் கூறிக் கொண்டிருந்தபோதே, மேலும் 4 நபர்கள் மேற்படி கடைக்குள் அத்து மீறி நுழைந்து, ராஜேஸ்வரியை கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் கழுத்திலிருந்த 7 சவரன் தங்க சங்கிலி மற்றும் கடையிலிருந்த பணம் ரூ.5,020/- ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து, ராஜேஸ்வரி, ராயலாநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், ராயலாநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் மேற்படி அழகுநிலையத்தில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் ஒரு குற்றவாளியின் உருவம் மட்டும் அடையாளம் தெரிந்தது. அந்த உருவத்தை வைத்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி 1.கொம்பையா பாண்டியன் (27), திருநெல்வேலி மாவட்டம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 

இவர் கொடுத்த தகவலின்பேரில், மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற கூட்டாளிகள் மற்றும் நண்பர்கள் 2.முகமது இம்ரான்கான் (29), கீழக்கரை, ராமநாதபுரம் , 3. மணி (எ) சண்முகமணி (35), திரேசபுரம், தூத்துக்குடி மாவட்டம், 4.சபீர் (28), , வியாசர்பாடி, 5.சங்கர் (22), நாங்குநேரி தாலுக்கா, திருநெல்வேலி மாவட்டம் 6.வினோத் (எ) வினோத்குமார் (34), போரூர், , 7.கோபி (24), பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம், 8.சுடலைக்கண்ணன் (24), நாங்குநேரி தாலுக்கா, திருநெல்வேலி மாவட்டம் 9.இசக்கிமுத்து (30), நாங்குநேரி, திருநெல்வேலி மாவட்டம் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 9 குற்றவாளிகளிடமிருந்து, 7 சவரன் தங்கநகை, 3 செல்போன்கள் மற்றும் 2 கத்திகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.விசாரணையில், கொம்பையா பாண்டியன், இதற்கு முன் அழகு நிலையத்தை நடத்தி வந்தபோது, இவருக்கும் ராஜேஸ்வரி பணிபுரிந்து வரும் அழகு நிலையத்தின் உரிமையாளருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்த காரணத்தால், அவரை பழிவாங்க கொம்பையா பாண்டியன் திட்டமிட்டிருந்தார். அதன்பேரில், மேற்படி ராஜேஸ்வரியின் கடையில் புகுந்து, மேற்படி கடைக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன், மேற்படி குற்றவாளிகளுடன் வடபழனி, மேற்கு சிவன்கோயில் தெருவில் உள்ள சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து, மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்