முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஸ்மார்ட் சிட்டிக்காக வடிவமைக்கப்பட்ட சின்னங்களை பொதுமக்கள் தேர்வு செய்யலாம் : சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தகவல்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      சென்னை

சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம், மாநில அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் 50 : 50 பங்களிப்புடன் 15.07.2016 அன்று உருவாக்கப்பட்டுள்ளது.

 

சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தின் நிர்வாக கூட்டம் 04.01.2016 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஆலோசகர்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட சின்னங்களில் 7 மாதிரி சின்னங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கூட்டத்தில் சென்னை ஸ்மார்ட் சிட்டிக்கான சின்னங்கள் பொதுமக்களின் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட நிர்வாகக் குழு பரிந்துரை செய்துள்ளது. அதனடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சின்னங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in <http://www.chennaicorporation.gov.in> ((Chennai Smart City Icon) ) என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் www.chennaicorporation.gov.in <http://www.chennaicorporation.gov.in> என்ற இணையதளத்தில் (Chennai Smart City Icon) ல் சின்னங்களை தெரிவு செய்து 1 முதல் 7 வரை வரிசைப்படுத்தி வாக்களிக்கலாம். மேலும், இதுதவிர பொதுமக்கள் சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்திற்கு புதிய சின்னத்தை வடிவமைத்து அதை பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்திற்கு சிறந்த சின்னத்தை தேர்வு செய்யவும் மற்றும் பொதுமக்கள் புதிய சின்னத்தை வடிவமைத்து பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய 21.01.2017 அன்று கடைசி நாளாகும். எனவே, பொதுமக்கள் இதில் பங்கேற்று வாக்களித்து சின்னத்தினை தெரிவு செய்திடுமாறும், இதுதொடர்பாக மேலும் விவரம் அறிய 044-2561 9677 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் முனைவர்.தா.கார்த்திகேயன், தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்