முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் தீவிர சுகாதார பணிகள்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      திருவள்ளூர்
Image Unavailable

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் கொசுக்களை கட்டுப்படுத்தி, கொசுக்களினால் ஏற்படும் வியாதிகளால் பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு தீவிர துப்புரவு பணிகள் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியால் நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் எங்கும் கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து பொதுமக்கள் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் கொசுக்களினால் ஏற்படும் வியாதிகளால் பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறும், சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைக்கவேண்டும் என்ற நோக்கிலும் பேரூராட்சி செயல் அலுவலர் ரவி தலைமையில் சிறப்பு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக கும்மிடிப்பூண்டியில் உள்ள 15 பேரூராட்சிகளிலும் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் போடப்பட்டு, கழிவுநீர் கால்வாய்களில் கொசு ஒழிப்பு புகை அடிக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் கால்வாய்கள் தொடர்ந்து தூர் வாரப்பட்டு அதில் கொசுக்கள் முட்டை இட்டு கொசுக்களை உற்பத்தி செய்யாதவாறு கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படுகிறது.

மேலும் பேரூராட்சி முழுக்க தினமும் குப்பைகள் தேங்காதவாறு துப்புரவு பணியாளர்கள் அமர்த்தப்பட்டு குப்பைகள் அகற்றம் செய்வதோடு, வீடுகளில் வசிப்பவர்களை குப்பைகள் குப்பை தொட்டிகளில் போடும்படியும், கால்வாய்களில் குப்பைகள் கொட்ட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த துப்புரவு பணிகளை பேராட்சி செயல் அலுவலர் ரவி நேரில் ஆய்வு செய்து துப்புரவு மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பணி ஆலோசனையை கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago