முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ்,, தலைமையில் நேற்று (09.01.2017) நடைபெற்றது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 289 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டு பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 1 பயனாளிகளுக்கு ரூ.33550 மதிப்பிலான நவீன செயற்கை காலையும் மற்றும் தாங்குக்கட்டையினையும் மாவட்ட நேரு இளையோர் மையம் சார்பாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் தேசிய நிர்மானம் தலைப்பிலான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற 3 மாணவிகளுக்கு முதல் பரிசாக ரு.5,000ம், இரண்டாம் பரிசு ரூ.2,000ம், மூன்றாம் பரிசு ரூ.1,000க்கான வரைவோலைகளையும் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகா~;, மக்கள் குறைதீர்க்கும் தனித்துணை கலெக்டர் ஜான்சிராணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், தாட்கோ மேலாளர் முத்துசெல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago