முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படக்கண்காட்சி : விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பார்வையிட்டனர்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      பெரம்பலூர்
Image Unavailable

2016-2017-ஆம் ஆண்டு கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற, பெரம்பலூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக்கண்காட்சி வைக்கப்பட்டது. இப்புகைப்பட கண்காட்சியை போட்டிகளில் கலந்து கொண்ட வீரர், வீராங்கனைகள் மற்றும் விளையாட்டு ஆர்வர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

 

 

 

புகைப்பட கண்காட்சி

 

 

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சியில் தமிழக அரசின் சிறப்புத்திட்டங்களான விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்யம்; வழங்கும் திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம், முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம், விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் தி;ட்டம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம், கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம், இலவச சீருடை வழங்கும் திட்டம், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம், உயர்த்தப்பட்ட முதியோர் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற அரசு நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட உள்ள இந்த புகைப்படக்கண்காட்சியை பார்வையிட்டு, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் விளையாட்டு ஆர்வர்கள் அனைவரும் அறிந்து பயன்பெறும் வகையில் இந்த புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

 

இந்த நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பாவேந்தன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் அ.பாரதி(செய்தி), மு.சுதாகர்(விளம்பரம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்