முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்டத்தில் பாரதியார் தின பெற்ரவர்களுக்கு பரிசு : கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் வழங்கினார்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      அரியலூர்
Image Unavailable

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சிதலைவர் எ.சரவணவேல்ராஜ், நேற்று (09.01.2016) பரிசுகளை வழங்கினார்.

 

முதலிடம்

 

 

2016-17ஆம் ஆண்டிற்கு மாநில அளவிலான 37-வது பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் திருச்சிராப்பள்ளி மாவட்டம், கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டிகளில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஹாக்கி அணி விளையாட்டு விடுதியை மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பில் 37-வது பாரதியார் தின மாநில அளவிலான குழுப்போட்டிகள் திருச்சி மாவட்டம், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி 19-வயது பிரிவில் பூப்பந்து போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.

மேலும், விவேகானந்தர் அறக்கட்டளையின் சார்பில் அரியலூர் கல்வி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பயிலும் 3800 மாணவர்களுக்கு துணை பாட கையேட்டினை மாவட்ட ஆட்சிதலைவர் எ.சரவணவேல்ராஜ், வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ந.மாரிமுத்து, பள்ளித் தலைமையாசிரியர் சின்னதுரை, கல்விப்புரவலர்கள் கணேசன், செல்வக்குமரன், சுதாகர், ரேவதி, நெப்போலியன், மகாலிங்கம், ராஜேந்திரன், ராஜா, தனபால், விஜயகுமார், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்