முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெபிட், கிரெடிட் கார்டுகள் 13–ந்தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்: பெட்ரோல் விற்பனை நிலையம் முடிவு

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு 1 சதவீத வரி விதிக்கும் முடிவை வங்கிகள் நிறுத்தி வைத்ததை அடுத்து, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வரும் 13-ம் தேதி வரை ஏற்றுக்கொள்வதாக பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தெரிவித்துள்ளன.

ஜனவரி 9-ந்தேதி (இன்று) முதல் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் பெட்ரோல், டீசல் விற்பனை செய்தால் அதற்கு விற்பனையாளர்களிடம் இருந்து 1 சதவீதம் பரிவர்த்தனை வரியை வசூலிக்கும்படி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியது. இது நாடு முழுவதும் உள்ள பெட்ரோல், டீசல் விற்பனையாளர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையடுத்து கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் 8–ந்தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல் விற்பனை செய்வதில்லை; ரொக்கம் கொடுத்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என்று பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது திரும்ப பெறப்பட்டுள்ளது. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வைக்கப்பட்டு உள்ள ‘சுவைப்’ கருவிகளுக்கு தனி பயன்பாட்டு வரி விதிக்க மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. அதன்படி 9-ந் தேதி (நேற்று) முதல் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வைக்கப்பட்டு உள்ள ‘சுவைப்’ கருவிகளுக்கு தனி பயன்பாட்டு வரி (எம்.டி.ஆர்.) விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது இனி பெட்ரோல் விற்பனை நிலையங்களில் தனி நபர் 1,000 ரூபாய்க்கு குறைவாக பெட்ரோல் நிரப்பி அந்த தொகையை தனது ‘டெபிட்’ கார்டு மூலம் தரும்போது, சம்பந்தப்பட்ட பெட்ரோல் டீலர் 0.25 சதவீத வரி செலுத்தவேண்டும். ரூ.1,000 முதல் ரூ.2 ஆயிரம் வரையிலான தொகைக்கு ‘சுவைப்’ செய்யும்போது 0.50 சதவீதமும், ரூ.2 ஆயிரத்துக்கு மேல் பெட்ரோல் தொகையை ‘சுவைப்’ செய்யும் போது ஒரு சதவீத வரியும் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் கிரெடிட் கார்டு மூலம் ஒருமுறை ‘சுவைப்’ செய்தாலே ஒரு சதவீத வரி செலுத்தவேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வரி விதிப்பு முறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.இந்த நடவடிக்கைக்கு பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எங்களின் லாப வரம்பை எண்ணை நிறுவனங்கள்தான் நிர்ணயம் செய்கின்றன. ஏற்கெனவே, அந்த வரம்பை உயர்த்துமாறு நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். இந்நிலையில், எங்களுக்கு கிடைக்கும் லாபத்திலும் பரிவர்த்தனைக் கட்டணத்தை பிடித்தம் செய்துவிட்டால் தொழிலை நடத்த முடியாது. எனவே வங்கிகளின் இந்த அறிவிப்பைக் கண்டித்து ஞாயிறு நள்ளிரவு முதல் பெட்ரோல் நிலையங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை ஏற்றுக்கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளோம்” என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்தன.இந்த நிலையில் நேற்றிரவு இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டது. பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளையும், வங்கி அதிகாரிகளையும் சந்தித்து இதுபற்றி பேச வைத்தனர். அப்போது கார்டுகள் மூலம் நடைபெறும் ரொக்கமில்லா பண பரிவர்த்தனைக்கு 1 சதவீதம் வரி விதிப்பதை 13-ந்தேதி வரை நிறுத்தி வைப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் கார்டுகள் மூலம் பெட்ரோல், டீசல் வினியோகிப்பதற்கான 1 சதவீதம் வரி விதிப்பை மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்க வங்கிகள் அவகாசம் அளித்துள்ளனஇதையடுத்து டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளை ஏற்றுக் கொண்டு 13-ந்தேதி வரை பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என்று விற்பனையாளர்கள் அறிவித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள 4 ஆயிரத்து 470 பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் இன்று ‘சுவைப்’ கருவிகளை பயன்படுத்தி டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்பட்டது.இதனால் நேற்று பொதுமக்கள் கார்டுகளை பயன்படுத்தி தங்கு தடையின்றி பெட்ரோல் பெற்றனர்.இதற்கிடையே 1 சதவீதம் பரிமாற்ற வரி விதிப்பு பிரச் சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி வங்கி அதிகாரிகளும், பெட்ரோல் விற்பனையாளர்களும் மீண்டும் சந்தித்து பேச உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago