முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலத்தில் தரமற்ற வெல்லம் எண்ணெய் தயாரிப்பு 4 ஆலைகளுக்கு நோட்டீஸ்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      சேலம்

சேலம் மாவட்டத்தில் கருப்பூர், கரும்பாலை, ஓமலூர், மாமாங்கம் பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.பொங்கல் பண்டிகை நெருங்குவதால் வெலத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பெரிய வெல்லம் அச்சு செல்லம் தயாரிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. வெல்லம் தயாரிப்புக்கு சர்க்கரையை பயன்படுத்தக்கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் பெரும்பாலான உற்பத்தியாளர்கள், சர்க்கரையை கொண்டு வெல்லம் தயாரிப்பில்  ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாவட்ட உணவு பாதுகாபபு அலுவலர் அனுராதா தலைமையிலான  அதிகாரிகள் கருப்பூர் பகுதியில் உள்ள வெல்ல ஆலையை ஆய்வு செய்தனர். அப்போது தரமற்ற முறையில் வெல்லம் தயாரித்த 2 ஆலைகள் கண்டறியப்பட்டது. பின்னர் அந்த ஆலை உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.இதேபோல், சூரமங்கலத்தில் இயங்கி வரும் கடலை எண்ணெய் தயாரிக்கும் ஆலைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது 2 ஆலைகளில் தரமற்ற எண்ணெய் தயாரிக்கப்பட்டது தெரிந்தது. இதையடுத்து அந்த உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில் கலப்பட பொருட்களை கொண்டு வெல்லம் தயாரிக்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தரமற்ற வெல்லம் தயாரித்தால், அந்த ஆலை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்