முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை அண்ணாமலையார் கோவிலில் வரும் 15ந் தேதி திருவூடல் திருவிழா

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      திருச்சி

]திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் 15ந் தேதி திருவூடல் திருவிழா நடைபெறவுள்ளது. திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் விழாக்களில் முக்கிய விழா திருவூடல் விழாவாகும். மனித வாழ்க்கையில் கணவன்,  விக்கிடையே ஏற்படுவது ஊடல், இறைவனுக்கும் இறைவிக்கும் இடையே நடப்பது திருவூடல் ஆகும். வாழ்க்கையில் கணவன், மனைவிக்கும் இடையே ஊடல் நடப்பதும் பின்னர் கூடல் நடப்பதும் ஒருநிலை என்பதை விளக்கும் விதமாக இந்த திருவூடல் விழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 2ம் நாள் நடக்கிறது. அதன்படி இந்த விழா குறித்து கோவில் தல வரலாற்றில் கூறியிருப்பதாவது, திருவண்ணாமலை கிரிவல பாதையில் பிருங்கி மகரிஷி என்ற முனிவர் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். இவர் சிவபெருமானை நினைத்து மட்டும் கடும் தவம் புரிந்தார். உலகை காக்கும் இறைவனான சிவனை மட்டும் வணங்கியதால் உடன் உள்ள தன்னை முனிவர் வணங்காததால் கோபமடைந்த அம்பாள் சிவனிடம் முனிவரின் செயல்குறித்து வெளிப்படுத்தினார். இதுகுறித்து முனிவரிடம் சிவபெருமான் அம்மனை வணங்குமாறு கூறியதற்கு முனிவர் மறுத்துவிட்டார். இதையடுத்து முனிவரை மேலும் சோதிக்க சிவபெருமானுடன் அம்பாள் இணைந்து உட்கார்ந்திருந்தார். இதனையறிந்த முனிவர்  வண்டு உருவமெடுத்து சிவபெருமானை மட்டும் சுற்றி வணங்கி வந்தார். இதனால் மனமுறுகிய சிவபெருமான் பிருங்கி மகரிஷிக்கு வரம் கொடுப்பதற்காக கிரிவலம் சென்றதால் சிவன் மீது அம்பாளுக்கு ஊடல் ஏற்பட்டது. இந்த புராண கதையை நினைவூட்டுவதற்காகத்தான் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 2ம் நாள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருவூடல் விழா நடக்கிறது. முன்னதாக அதிகாலை 6 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் திட்டி வாசலில் நந்திக்கு தரிசனம் கொடுத்து பின்னர் சூரியனுக்கு தரிசனம் கொடுப்பார். தொடர்ந்து மாடவீதியில் சுவாமி 3 முறை வலம வருவார். அப்போது வழிநெடுகிலும் மண்டக படியில் எழுந்தருள்வார். ஞான தூதராக சுந்தரமூர்த்தி நாயனார் உடன் செல்வார் மாலை 6 மணிக்குமேல் திருவூடல் தெருவில் அம்பாளிடம் சிவபெருமான் சார்பில் சுந்தரமூர்த்தி தூது செல்வார். அதை அம்பாள் ஏற்றுக்கொள்ளாமல் ஊடல் ஏற்பட்டு கோபத்துடன் கோவிலுக்கு திரும்பி வருவார். அருணாசலேஸ்வரர் திருமஞ்சன  கோபுர தெருவிலுள்ள குமரக்கோவிலில் தங்கி மறுநாள் அதிகாலை கிரிவலம் செல்வார் பின்னர் கோவிலில் பகல் 12 மணிக்குமேல் மறுஊடல் நடக்கும். விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சி.ஹரிபிரியா மற்றும் விழாக்குழுவினர் செய்துவருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago