முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமாஜ் வாடி கட்சிக்கு நானே தலைவர் சைக்கிள் சின்னம் எனக்கு தான் வர வேண்டும் : தேர்தல் ஆணையத்திடம் , முலாயம் சிங் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி  - சமாஜ் வாடி கட்சிக்கு நானே தலைவர் , கட்சியின் சைக்கிள் சின்னம் எனக்குதான் தர வேண்டும் என அந்த கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் திட்டவட்டமாக  தெரிவித்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது முலாயம் சிங்கின் சமாஜ் வாடி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் மாநில முதல்வராக உள்ளார்.  அவருக்கும் கட்சியின் மாநில தலைவரும் முலாயம் சிங்கின் தம்பியுமான சிவ்பால் யாதவிற்கும் இடையே கருத்து மோதல் இருந்தது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கட்சி அகிலேஷ் யாதவ் அணி என்றும் முலாயம் சிங் அணி என்றும் உடைந்தது.

 இந்த நிலையில் கட்சியின் சைக்கிள் சின்னம் எங்களுக்குதான் அளிக்க வேண்டும் .சமாஜ் வாடியின் எம்.எல்.ஏக்கள்அதிக அளவில  எங்கள் அணியிலேயே உள்ளனர் என அகிலேஷ் யாதவ்  அணியின் தலைவர் ராம் கோபால் யாதவ் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தினார்.  இதேப்போன்று, முலாயம் சிங்கும் டெல்லியில் தேர்தல் ஆணையத்தினை சந்தித்து சைக்கிள் எங்கள் கட்சியின் சின்னம். அந்த கட்சியின் தலைவர் நான்தான். எனவே எங்களுக்குதான் சைக்கிள் சின்னம் தரப்பட வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தார். உத்தரப்பிரதேச மாநிலதில்  வருகிற பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் 7 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற சமாஜ் வாடி கட்சி திட்டமிட்ட நிலையில் அந்த கட்சியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு  முலாயம் சிங் தனது கட்சியின் மூத்த தலைவர் சிவ்பால் யாதவ், அமர் சிங் ஆகியோருடன் வந்தார்.

தேர்தல் ஆணையத்தில் முலாயம்  சிங் யாதவ் அளித்த எழுத்துப்பூர்வ பத்திரத்தில்  சமாஜ் வாடி கட்சியின் தலைவர் நான்தான். கட்சியின் சைக்கிள் சின்னம் எங்களுக்குதான் உரியது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராம் கோபால் யாதவ் கூட்டிய கூட்டத்தில்தான் அகிலேஷ் யாதவ் கட்சியின் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியில் நீக்கப்பட்ட  ராம் கோபால் யாதவ் கூட்டிய இந்த கூட்டம் சமாஜ் வாடி   அரசியல் சட்டப்படி  சட்டவிரோதமானது என்றும் முலாயம் சிங் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.  போட்டி கூட்டத்தில் அகிலேஷை தலைவராக தேர்வு செய்த தீர்மானம் நிறைவேறியுள்ளது. அதே நேரத்தில் என்னை கட்சியின் வழிகாட்டியாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் என்னை நீக்கியதாக அந்த போட்டி கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட வில்லை என்றும் முலாயம் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு சென்ற முலாயம் சிங் யாதவ் பாராளுமன்றத்தின் ராஜ்ய சபா தலைவருக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்  சமாஜ் வாடி கட்சியில் இருந்து ராம் கோபால் யாதவ் நீக்கப்பட்டார். அதேபோன்று  ராஜ்ய சபாவில் சமாஜ் வாடி கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். எனவே அவருக்கு முன் இருக்கை தராமல் பின் பகுதி இருக்கையில் இடம் தர வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் முலாயம் திட்டவட்டமாக எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தினை ராஜ்ய சபா தலைவர் ஹமீத் அன்சாரி பெற்றார்.  தற்போது ராஜ்ய சபாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் முக்கிய எதிர் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இருக்கைக்கு அருகே  முன் வரிசையில் ராம் கோபால் யாதவ் அமர்ந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago