முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7.3 ரிக்டர் அளவில் பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

மணிலா  - பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்கிழக்கில் உள்ள ஜோலோ தீவு மற்றும் தபியாவான் பகுதிகளில் நேற்று 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்கிழக்கில் உள்ள ஜோலோ தீவு மற்றும் தபியாவான் பகுதிகளில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது. செலபஸ் கடல் பகுதியில் பூமியின் அடியில் சுமார் 617 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நேற்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.3 அலகுகளாக பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படாத நிலையில் இந்த நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை.

எச்சரிக்கை
இந்நிலையில் இந்தியப் பெருங்கடலின் அடிப்பகுதியில் புதிதாக ஏற்பட்டுள்ள பாறை அடுக்கால் தெற்காசிய பகுதிகளில் பெருமளவு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்