முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் திருக்கோயிலில் கோயில் நடைகள் திறப்பு-அடைப்பு நேரம் மாற்றம்.

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்

தை அமாவாசையை நாளை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக  ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பகல் முழுவதும் நடைகள் திறக்கப்பட்டு சுவாமி,அம்மன் சன்னதியில் சிறப்பு அபிஷேகங்களும்,பூஜைகளும்,தீபாரதணை வழிபாடுகள் நடைபெறும் என திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

 ராமேசுவரம்  ராமநாதசுவாமி திருக்கோயிலில்  தை அமாவாசை திருநாளான ஜனவரி 27 ஆம் தேதி அதிகாலையில் 2.30 மணிக்கு கோயிலின் நடைகள் திறக்கப்பட்டு பின்னர் 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜைகளும் மற்றும் அதனை தொடர்ந்து அதிகால பூஜைகளும் நடைபெறும்.பின்னர் காலை 7 மணிக்கு சுவாமி ஸ்ரீராமர்,ராமநாதசுவாமி,சுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் சகிதம் திருக்கோயிலில் இருந்து புறப்பாடகி அக்னி தீர்த்தக்கடலில் தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சி நடைபெறும்.இதையடுத்து பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் பகல் முழுவதும் நடைகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் தீபாராதணை வழிபாடுகளும் தொடர்ந்து நடைபெறும். அதன் பின்னர் இரவு 8 மணிக்கு ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்மன் அலங்காரத்துடன் வெள்ளி ரதத்தில் புறப்பாடாகி நான்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.  மேலும் அமாவாசையன்று பக்தர்களின் கூட்டம் அதிகமாக வருவதால் திருக்கோயிலில் சார்பாக பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் வளாகம்,நான்கு ரதவீதியில் ஆகிய பகுதிகளில் கூடுதலாக குடிநீர் வசதிகளும்,ஓய்வு அறைகளும், அன்னதானமும் வழங்கப்படும்.மேலும் கோயில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக வழிகாட்டி பணிக்காக வெளியூர் திருக்கோயில் பணியாளர்களை ஈடுபடுத்தவும், பாதுகாப்பு கருதி காவல் துறை அதிகாரிகளை கூடுதலான பயன்படுத்தவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக  திருக்கோயிலின் இணை ஆணையர் செல்வராஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago