சிரியாவில் பிணைக்கைதிகளை சுட்டுக்கொல்லும் சிறுவர்கள் ! வீடியோவை வெளியிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள்

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      உலகம்
isis children

லண்டன், ஜன. 11- பிணைக்கைதிகளை சிறுவர்கள் சுட்டுக் கொல்லும் வீடியோவை ஐ.எஸ்.தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். வீடியோ வெளியீடு பிணைக்கைதிகளை தலைதுண்டித்து படுகொலை செய்யும் வீடியோக்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். தற்போது இளம் சிறுவர்கள் கையில் துப்பாக்கி கொடுத்து பிணைக் கைதிகளை கொலை செய்து வருகின்றனர். அது குறித்த வீடியோவை சமீபத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். பிணைக் கைதிகள் சிரியாவின் வடகிழக்கில் உள்ள டெர்-யெஸ்-சார் நகரத்தில் 3 பிணைக் கைதிகள் 3 சிறுவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் முன்பு பிணைக்கைதிகள் கறுப்பு துணியால் முகம் மூடப்பட்ட நிலையில் மண்டியிட்டுள்ளனர். அவர்கள் முன்பு நிற்கும் 4 வயது சிறுவர்கள் 3 பேர் அவர்களை குறிபார்த்து சுட்டு வீழ்த்தும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. வீடியோவின் அடுத்த பகுதியில் 7 வயது சிறுவன் ஒருவன் தீவிரவாதிகள் மத்தியில் தோன்றி உணர்ச்சி மிகுதியுடன் பேசும் காட்சி ஒளிபரப்பாகிறது. குழந்தை வீரர்கள் பிரிவு அச்சிறுவன் மிக நீண்ட கத்தியை சுழற்றியபடி முழங்காலிட்டு இருக்கும் பிணைக்கைதியின் குரல் வளையை அறுத்து கொலை செய்யும் காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இத்தகைய வீடியோ காட்சிகள் மூலம் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் குழந்தைகளும் ஈடுபடுத்தப்படுவது தெரியவந்துள்ளது. அதற்கு குழந்தை வீரர்கள் பிரிவு என பெயரிட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: