முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில்நுட்பப் பிரிவில் கோவை இளைஞருக்கு ஆஸ்கர் விருது

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

லாஸ் ஏஞ்சல்ஸ்  - தொழில்நுட்பப் பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காக கோவையை சேர்ந்த கிரண் பட் என்பவர் ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். அடுத்த மாதம் நடக்கும் ஆஸ்கர் விழாவில் விருதை பெற்றுக்கொள்கிறார்.

கோவையை சேர்ந்தவர்
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த சீனிவாச பட்டின் மகன் கிரண் பட்(41). அமெரிக்காவில் வசித்து வரும் இவருக்கு, முக பாவனைகளை தொழில்நுட்பப் பிரிவில் மாற்றுவதில் சிறப்பாக செயல்பட்டதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் 2017-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது கிரண் பட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் படங்கள்
பள்ளிக்கல்வியை கோவையில் பயின்ற கிரண் பட், தொழில்நுட்பக் கல்வியை ராஜஸ்தானின் பிர்லா தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்றார். கணிப்பொறி அறிவியலில் டாக்டர் பட்டத்தை அமெரிக்காவின் கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் பெற்றார். 'அவெஞ்சர்ஸ்', 'பைரேட்ஸ் ஆப் கரிபீயன்', 'வார்க்ராப்ட்', 'ஸ்டார் வார்ஸ் எபிசோட் 7' போன்ற புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களில் கிரண் பட் பணியாற்றியுள்ளார்.

ஆஸ்கர் விருது
பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெறும் விருது விழாவில் கிரண் பட் விருதினை பெற்றுக் கொள்ளவிருக்கிறார். முன்னதாக கடந்தாண்டு கோவையை சேர்ந்த கொட்டலாங்கோ லியானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்