முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாடுகளில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்க வேண்டும் பிரதமருக்கு பாபா ராம்தேவ் வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

ராய்பூர்-  வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தையும் மீட்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாபா ராம்தேவ் வலியுறுத்தியுள்ளார். பாராட்டு சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரபல யோகாசன குரு பாபா ராம்தேவ் பிரதமரின் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை பெரிதும் பாராட்டினார். ஓட்டுவங்கி அரசியலில் கவனம் செலுத்தாமல் வளர்ச்சியை நோக்கி நாட்டை கட்டமைக்கும் நடவடிக்கைகளில் பிரதமர் நரேந்திர மோடி அக்கறை காட்டி வருகிறார்.

85 சதம் ஒழிப்பு பெரிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்க வைத்துள்ள அவரது துணிச்சலான நடவடிக்கை தொடர்பாக யாரும் கேள்வி எழுப்ப முடியாது. இந்த அதிரடி நடவடிக்கையால் நாட்டில் உலவிவந்த 80-85 சதவீதம் அளவிலான கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில்... இதேபோல், பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்திருந்தபடி, வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தையும் மீட்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாபா ராம்தேவ் வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்