முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயாவதி சகோதரருக்கு ரூ.1300 கோடி சொத்து : வருமான வரித்துறை விசாரணை

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் சகோதரருக்கு ரூ.1300 கோடி சொத்து குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது.

குற்றச்சாட்டு
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உத்தரபிரதேச முதல்வராக இருந்தபோது முறைகேடாக சொத்து சேர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாயாவதியின் சகோதரர் அனந்த குமார் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை அனந்தகுமாரின் மொத்த சொத்து மதிப்பு ரு.7.5 கோடி யாக இருந்தது.

ரூ.1316 கோடியாக உயர்வு
தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.1316 கோடி யாக உயர்ந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. திடீரென சில ஆண்டுகளுக்குள் அவர் சொத்து மதிப்பு  எப்படி இந்த அளவுக்கு உயர்ந்தது என்பது வருமான வரித்துறை அதி காரிகளுக்கு ஆச்சரியத்தை யும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

விசாரணையில் வருமான வரித்துறை
ரூ.1300 கோடி சொத்து சேர்த்துள்ள அனந்தகுமார் அதிக அளவில் வெளியில் தன்னைப் பற்றி பிரபலப் படுத்தி  கொள்ளாதவர். ஓசையின்றி அவர் சொத்து சேர்த்து இருப்பது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.நிறைய நிறுவனங்களில் அனந்தகுமார் பங்குதார ராகவும் இயக்குனராகவும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல நிறுவனங்கள் போலி பெயர்களில் ஒரே முகவரியில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாயாவதி சகோதரர் அனந்த குமாரின் ரூ.1300 கோடி சொத்துக்கள் பற்றி விசா ரிக்க வருமான வரித்துறை தயாராகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்