முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் தொகை உயர்வு தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து: பா.ஜ.க எம்.பி. சாக்ஷி மகராஜூக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - மக்கள் தொகை உயர்வு தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த பா.ஜனதா  சாக்ஷி மகராஜூக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்து உள்ளது.

சர்ச்சை கருத்து
பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், உன்னாவ் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான சாக்ஷி மகராஜ் மீரட் நகரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும்போது, ‘‘இந்தியாவில் மக்கள் தொகை பெருகிக் கொண்டே போவதற்கு இந்துக்கள் காரணம் அல்ல. 4 பெண்களை திருமணம் செய்யவும், 40 குழந்தைகளை பெற்றுக் கொள்ளவும் அனுமதிப்பவர்கள்தான் காரணம். எனவே, நாட்டின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடுமையான சட்டதிட்டங்களை வகுக்கவேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகள் கண்டனம்
அவருடைய இந்த பேச்சு அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த சாதி, மதத்தின் பெயரை பயன்படுத்தி ஒட்டுக் கேட்கக் கூடாது என்று உத்தரவை மீறுவதாக உள்ளது என்றும் எனவே அவரை எம்.பி. பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் உத்தரபிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகிலேஷ் பிரதாப் சிங் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்து உள்ளார். சாக்ஷி மகராஜின் பேச்சுக்கு காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பா.ஜ.க விளக்கம்
சாக்ஷி மகராஜின் கருத்துகள், அவரது சொந்த கருத்துகள் என்று பாரதீய ஜனதா விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து பாரதீய ஜனதா மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், "சாக்ஷி மகராஜ் கருத்துக்கும், பாரதீய ஜனதாவுக்கும் சம்பந்தம் கிடையாது; அது அவருடைய சொந்தக் கருத்து' என்றார். சாக்ஷி மகராஜூம், தாம் பாரதீய ஜனதா கட்சியின் நிகழ்ச்சியில் இக்கருத்தை தெரிவிக்கவில்லையென்று விளக்கம் அளித்துள்ளார்.

வழக்குப்பதிவு
உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் சாக்ஷி மகராஜின் மீரட் பேச்சு குறித்து மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்யும்படி தேர்தல் கமி‌ஷன் கேட்டுக் கொண்டது. இந்த அறிக்கை கிடைத்த பிறகே அவர் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறினரா? இல்லையா? என்பதை ஆய்வு செய்து அதுபற்றி முடிவு செய்யப்படும் என்று தேர்தல் கமி‌ஷன் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே, சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக சாக்ஷி மகராஜூக்கு எதிராக மீரட் நகர போலீஸ் வழக்குப்பதிவு செய்து உள்ளது.

தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
இந்நிலையில் காங்கிரஸ் அளித்த புகாரை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் சாக்ஷி மகராஜூக்கு நோட்டீஸ் விடுத்து உள்ளது. மத அடிப்படையில் இருதரப்பினர் இடையே எதிர்ப்பை உருவாக்க முயற்சிசெய்தல் என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. ஜனவரி 11-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. பதிலளிக்கவில்லை என்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago