முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இதுவரை கணக்கில் காட்டப்படாத ரூ.4 லட்சம் கோடி வங்கி கணக்குகளில் டெபாசிட் : ஆய்வில் தகவல்

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்யப்பட்ட ரூ. 4 லட்சம் கோடி பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது என்று ஆய்வில் தெரியவந்து உள்ளது.

வங்கிகளில் டெபாசிட்
இது தொடர்பாக ஆவணங்களை ஆய்வுசெய்யவும், ரூ. 3-4 லட்சம் கோடி டெபாசிட் செய்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் வருமான வரித்துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது மூத்த மத்திய அரசு அதிகாரி கூறிஉள்ளார். நவம்பர் மாதம் 8-ம் தேதி மத்திய அரசு நாட்டில் புழகத்தில் இருந்த  உயர் மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இதனையடுத்து பொதுமக்கள் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தனர். இப்போது மத்திய அரசு இது தொடர்பான தகவல்களை பெற்று உள்ளது.

ஆய்வில் தகவல்
தகவல்களை கொண்டு ஆய்வு செய்கையில் 60 லட்சத்திற்கும் மேலான வங்கி கணக்குகளில் ரூ. 2 லட்சத்திற்கு மேலாக டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற வங்கி கணக்குகளில் மட்டுமே ரூ. 7.34 லட்சம் கோடிக்கு மேல் பணம் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது என்று மத்திய அரசு அதிகாரி கூறிஉள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் ...
நவம்பர் 9-ம் தேதியில் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு வங்கி கணக்குகளில் ரூ. 10,700 கோடி டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.  பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் ரூ. 16,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். நீண்ட நாட்களாக செயல்படாத வங்கி கணக்குகளில் ரூ. 25 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. நவம்பர் 8-ம் தேதி அறிவிப்புக்கு பின்னர் ரூ. 80 ஆயிரம் கோடி கடன் திரும்ப செலுத்தப்பட்டு உள்ளது என்று அதிகாரி கூறிஉள்ளார்.

ஆய்வு அறிக்கைகள்
நவம்பர் 8-ம் தேதி அறிவிப்புக்கு பின்னர் பொதுமக்கள் தங்களிடம் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய டிசம்பர் 30-ம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டது. இதனையடுத்து வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கைகள் மற்றும் ஏற்கனவே மத்திய அரசிற்கு கிடைத்த புலனாய்வு தகவல் தரவுகளை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பணம் டெபாசிட் செய்யப்பட்டது தொடர்பாக முழுமையான ஆய்வு அறிக்கைகள் கிடைத்த பின்னர் அறிக்கையானது வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு மற்றும் பிற மத்திய விசாரணை முகமைகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விரைவில் நடவடிக்கை
பயங்கரவாத்தினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பணம் டெபாசிட் செய்யப்பட்டது தொடர்பான தகவல்கள் சம்பந்தப்பட்ட விசாரணை முகமைகளுக்கு அனுப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரி கூறிஉள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago