அ.தி.மு.க. பொதுச் செயலாளாருடன் ராம்கி -நிரோஷா சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      தமிழகம்
ramki and nirosha(N)

சென்னை  - அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதை யொட்டி சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில், அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், திரையுலகினர் உள்ளிட்டோர் தொடர்ந்து சந்தித்து, வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சசிகலாவை, சென்னை போயஸ்தோட்ட இல்லத்தில்  நேற்று, நடிகர் ராம்கி, அவரது மனைவியும், நடிகையுமான நிரோஷா ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதற்கு சசிகலா தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். தமிழ்நாடு ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர்  ந. தாமரைக்கண்ணன், மாநிலத் தலைவர் கா. அருண்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் வை. பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள், சசிகலாவை  நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் சசிகலா தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.


இதை ஷேர் செய்திடுங்கள்: