முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பர்கூர் மற்றும் ஊத்தங்கரையில் பொங்கல் திருநாளையொட்டி பயனாளிகளுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு: அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எம்.நடுப்பட்டி, ஊத்தங்கரை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி  மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதி வண்டிகளை  அமைச்சர்  வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நடுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 177 மாணவ, மாணவியர்களுக்கும்,  ஊத்தங்கரையில் 11 பள்ளிகளைச் சேர்ந்த 1990 மாணவ, மாணவியர்களுக்கும், போச்சம்பள்ளிஅரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 358 மாணவ, மாணவியர் என மொத்தம் 2525 மாணவ, மாணவியர்களுக்கு ரூ 94 லட்சத்து 7 ஆயிரத்து 30 ரூபாய் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளையும்  பொங்கல் திருநாளையொட்டி பர்கூர் மற்றும் ஊத்தங்கரையில் பொங்கல் சிறப்பு  பரிசு தொகுப்புகளை   கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி  வழங்கினார்.இவ்விழா   கலெக்டர் சி.கதிரவன்  தலைமையிலும்,  சட்டமன்ற உறுப்பினர்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.  இதில் முதன்மை கல்வி அலுவலர் கலையரசி  அனைவரையும் வரவேற்றார்.  கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணாரெட்டி  விலையில்லா மிதிவண்டிகளை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி பேசியதாவது.மறைந்த  முதலமைச்சர் அம்மா  கொண்டுவந்த திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது. இந்தியாவிலேயே  29 மாநிலங்களில் எந்த முதலமைச்சரும் செய்யாத திட்டங்களை மறைந்த  தமிழக முதலமைச்சர் அம்மா  செய்துள்ளார்கள், கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடை, மிதிவண்டி, மடிக்கணினி, கல்வி ஊக்க தொகை, புத்தகம், பேனா, பென்சில், பை, அட்லஸ் வரைபடம் உள்ளிட்ட 14-வகையான கல்வி உபகரணங்களை வழங்கியுள்ளார்கள்.  கர்ப்;பிணி தாய்மார்களுக்கு உதவித் தொகை, பிரசவத்தின் போது தாய்மார்களுக்கு கிளுகிளுப்பை, சோப்பு, பவுடர் உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் அடங்கிய அம்மா பெட்டகம், பேருந்து நிலையங்களில் பாலுட்டும் அறை, தாலிக்கு தங்கம் 4 கிராமிலிருந்து 8 கிராம் வரை தங்கம், பட்டதாரி பெண்களுக்கு ரூ.50 ஆயிரம், 12ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் ஏழை பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள், விலையில்லா 4- ஆடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும் நோக்கில்  இது போன்ற திட்டங்களை  அம்மா  வழியில் செயல்படும் தமிழக அரசானது வழங்கி வருகிறது. கடந்த ஐந்தாண்டில் மறைந்த தமிழக முதல்வர் கொண்டுவந்த திட்டத்தின் கீழ் பொங்;கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.  குடும்ப அட்டைகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் வகையில் நியாயவிலைக் கடைகள் மூலமாக பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.  அனைவரும் கட்டாயம் குடும்ப அட்டைகள் மற்றும் தொலைபேசி எண்களை பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.  தமிழர் திருநாளான பொங்கலையொட்டி பொங்கல் தொகுப்பு பரிசுகளான முந்திரி, சர்க்கரை, பச்சரிசி, ஏலக்காய் மற்றும் இரண்டு அடி கரும்பு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது இவற்றை எல்லாம் பெற்று பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என  கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்  பேசினார். இந்நிகழ்ச்சியின் போது கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பாண்டியன், மாநில நிலவளவங்கித் தலைவர் சாகுல் அமீது, தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தென்னரசு, கூட்டுறவு சங்கத் தலைவர் தேவேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் ஜெயபால், கிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் அகமதுபாஷா, துணைப்பதிவாளர்கள் பாலமுருகன், ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன்,  வட்டாட்சியர்கள் இளவரசி, அமுதன், மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், சார்பதிவாளர்கள் முருகேசன், ஜனார்தனன், நடுப்பட்டி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அரவிந்தன் மற்றும் பெற்றோர்கள் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்