முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடுகளுக்கான அலங்கார பொருட்கள் விற்பனை மும்முரம்

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      தர்மபுரி

தமிழர் திருநாளாம் தைத்திருநாள் என்று சொல்லக்கூடிய பொங்கல் திருநாள் இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில்,  பொங்கல் தினத்தன்று பசுமாடுகளையும், எருதுகளையும், எருமை மாடுகள், ஆடு உள்ளிட்ட கால்நடைகல் உழவர்களுக்கு உறுதுணையாக உழைப்பதை நினைவு கூறும் வகையிலும்,  அவற்றை போற்றும் வகையில்,  குளிப்பாட்டி பார்பவர்கள் ஆச்சர்யப்படும் நிலையில் அலங்கரிப்பது வழக்கம்.  அவ்வாறு கால்நடைகளை    அலங்கரிக்க தேவைப்படும் பொருட்கள் தற்பொழுது விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பசுமாடுகளை அலங்கரிக்க வண்ண வண்ண நூல் கயிறுகள், கொம்பு கயிறுகள், திருஷ்டி கயிறு, சங்கு, வித விதமாக கண்ணை  கவரும் வகையில் குஞ்சங்கள், மூக்கனாக்கயிறு, கழுத்தில் அணியும் பலவகை மணிகள், சலங்கைகள், குப்பி, பட்டை சங்கலி, ஜங்கு பட்டை, வண்ணப்பூச்சிகள், கள்ள பூட்டு, வாப்பட்டி, சாட்டை  ஆகிய அலங்கார பொருட்களை தயார் செய்து, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர், பாப்பிரெட்டிபட்டி, பொம்மிடி, கடத்தூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதியில் உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும், விவசாயிகள் வாங்க ஏதுவாக பல்வேறு இடங்களிலும், வாரச்சந்தைகளிலும் விற்பனைக்காக வைத்துள்ளனர். பொங்கல் பண்டிகை நெருங்கிய வரும்  நாட்களில் கண்ணை கவரும் வகையில் உள்ள ஒரு சில அலங்கார பொருட்கள் விற்பனையாகிவிடும் என்பதாலும், நாட்கள் நெருங்க நெருங்க விலை உயரும் என்பதால் விவசாயிகள், அலங்கார பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அலங்கார பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள், அலங்கார பொருட்கள் விற்பனை  மெல்ல மெல்ல சூடுபிடிப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்