முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட சேலம் மாவட்டத்தில் 8.44 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது:கலெக்டர் வா.சம்பத், வழங்கி தகவல்

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      சேலம்

சேலம்:தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பினை சேலம் மாவட்டம், பள்ளப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையத்தில் கலெக்டர் வா.சம்பத், வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் , சட்டமன்ற உறுப்பினர் ஜி.வெங்கடாசலம்  முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி கலெக்டர்  தெரிவித்ததாவது: தமிழக முதல்வர் அவர்களின் ஆணைப்படி 2017ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும்  வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி குடும்ப அட்டை உடைய குடும்ப அட்டைதாரர்கள், காவலர்  குடும்ப அட்டை பெற்றுள்ள காவல் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு 1 கிலோ பச்சரிசி, 1கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத் துண்டுடன் தால 20 கிராம் முந்திரி, திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் மொத்த 1,541 நியாய விலைக்கடைகளும், 2 இலங்கை அகதிகள் முகாம்களும்  செயல்பட்டுவருகிறது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் மொத்தம் 800383 அரிசி பெறும் குடும்ப அட்டைகளும், 3112 காவலர் குடும்ப அட்டைகளும், 945 இலங்கைத் தமிழர் குடும்ப அட்டைகளும் என மொத்தம் 8,04,440 குடும்ப அட்டைகள் உள்ளன.  மேற்கண்ட அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் வகையில் 8,04,440 கிலோ பச்சரிசி, 8,04,440 கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக்கரும்பு துண்டுடன் முந்திரி 20 கிராம், திராட்சி 20 கிராம் மற்றும் ஏலக்காய் 5 கிராம் அடங்கிய தொகுப்பு 8,04,440 எண்ணிக்கையில் வழங்கப்படவுள்ளது. பச்சரிசி மற்றும் சர்க்கரை ஆகியவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளிலிருந்து நியாய விலைக் கடைக்கு நகர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.2 அடி நீள  கரும்புத்துண்டுடன் முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் ஆகியவை ரூ.45/- மதிப்பில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ.3,61,99,800/- மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டு சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற தகுதியுள்ள 8,04,440 குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் வா.சம்பத், தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் கோ.ராஜேந்திரபிரசாத், சேலம் மாவட்ட வழங்கல் அலுவலர் ராமதுரைமுருகன், சேலம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.வெங்கடாசலம், சேலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர்  அரியானூர்.பி.பழனிசாமி, துணைப்பதிவளார் டி.ரத்தினவேலு மற்றும் சேலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநர் கு.நரசிம்மன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago