புதுச்சேரி முதல்வர் மீது கவர்னர் கிரண் பேடி குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      அரசியல்
kiran bedi 2016 10 11

ஹைதரபாத்,  புதுச்சேரி அரசு என்னை வெறும்  பொம்மையாக இருக்கக்கூறியது என அந்த மாநில முதல்வர் மீது கவர்னர் கிரண் பேடி கடுமையாக குற்றம் சாட்டினார்.

 தமிழகத்திற்கு அருகே உள்ள யூனியன் பிரதேசம் புதுச்சேரி. இதன் முதல்வராக காங்கிரசின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நாராயண சாமி உள்ளார். தற்போது அவருக்கும் மாநில கவர்னர் கிரண் பேடிக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவுகிறது.

இந்த நிலையில் அவர் ஹைதராபாத்தில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது,


 யூனியன் பிரதேசம் மத்திய அரசின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும் . எனவே மத்திய அரசின் பிரதிநிதியான கவர்னரான நானே இந்த மாநிலத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்ற நபர் .
 புதுச்சேரி நிர்வாகம் எனது கட்டுப்பாட்டில்  உள்ளதால்  நான் எனது பணிகளை திறம் பட செய்கிறேன். இதில் இருந்து பின் வாங்க மாட்டேன். நான் வருகிற ஆண்டு மே மாதம் 29ம் தேதியன்று பதவியில் இருந்து விலகுவேன். நான் அந்த முடிவில் உறுதியாக உள்ளேன். தற்போது  ஆற்றி வரும் பணிகளை முடிக்க பதவிக்காலம் முக்கிய மல்ல. எனவே நான்  3வது ஆண்டு இந்த துணைநிலை ஆளுநர் பதவியில் நீடிக்க விரும்ப வில்லை.

 துணை ஆளுநர் பதவி என்பது மத்திய அரசின் நிர்வாக பிரதிநிதி. ஆனால் என்னை வெறும் காட்சிப்பொருளாக இருக்க காங்கிரஸ் ஆட்சி விரும்புகிறது. அதனை ஏற்க முடியாது.
இவ்வாறு புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி நேற்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

  புதுச்சேரியில் முதல்வர் நாராயண சாமியின் ஆட்சியாளர்களுக்கும், கவர்னர் கிரண் பேடிக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளதால் கிரண் பேடி  தனது பதவிக்காலம் 3 ஆண்டுகள் இருக்கும் போது இரண்டாவது ஆண்டிலேயே பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: