மன்னர் துக்ளக் பாணியில் பிரதமர் மோடி அரசு :மே.வ. முதல்வர் மம்தா பானர்ஜி பாய்ச்சல்

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      அரசியல்
Image Unavailable

 கென்டுலி(மே.வ) - பிரதமர் மோடி அரசு பொருளாதாரத்தை சீர் குலைத்த 14ம் நூற்றாண்டு மன்ன ர துக்ளக் பாணியில் ஆட்சி நடத்துகிறது என மேற்கு வங்க முதல்வரும் , திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறினார்.  பழைய ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு தொலைக்காட்சியில் தோன்றி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். நாட்டில் உள்ள கறுப்பு பணம், வரி ஏய்ப்பு , ஊழல் , தீவிரவாத்திற்கு நிதி செல்லுதல் ஆகியவற்றை முற்றிலும் ஒடுக்க வே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மோடி கூறினார்.

 பழைய ரூபாய் நோட்டு விவகாரத்தில் நாட்டு மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். அவர்கள் நாள் முழுவதும் வங்கிகளிலும், ஏ-டி.எம்களிலும் காத்து கிடக்கிறார்கள் . எனவே அரசு தனது முடிவை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரசும், திரிணாமுல் காங்கிரசும் வலியுறுத்தி வருகின்றன . ஆனால் அரசு தனது முடிவில் உறுதியாக உள்ளது. மோடி அரசின் இந்த செயல்பாடு குறித்து மேற்கு வங்க முதல்வரும் , திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கென்டுலியில் நடந்த நிகழ்ச்சியில் கூறியதாவது,

 14ம் நூற்றாண்டில் மக்களை பெரும் துயருக்கு ஆளாக்கிய மோசமான முடிவுகளை முகமது பின் துக்ளக் மன்னர் எடுத்தார். அவரைப்போலவே தற்போது பிரதமர் மோடி ஆட்சி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மத்தியில் நான் பல அரசுகளை பார்த்துள்ளேன். ஆனால் மோடி ஆட்சியைப்போன்ற துக்ளக் ஆட்சியை இதுவரை பார்த்ததில்லை. நாட்டின் பொருளாதாரத்தை சீர் குலைக்கும் வகையில்  துக்ளக் மன்னரின் ஆட்சி இருந்தது. அதேப்போன்று தற்போது பிரதமர் மோடியின் ஆட்சி உள்ளது. பிளாஸ்டிக் கரன்சின் வியாபாரியாக  மோடி ஆகி விட்டார். பிளாடிக்கை மக்கள் சாப்பிட முடியுமா? மக்களிடம் பணம் இல்லை. மக்களின்  பணம் கறுப்புப்பணமாக அறிவிக்கப்படுகிறது. ஆனால், பா.ஜ.கவின் கறுப்பு பணம் நியாயமான வழியில் சம்பாதிக்கப்பட்ட வெள்ளைப்பணமா? இவ்வாறு அவர் பேசினார்.


இதை ஷேர் செய்திடுங்கள்: