ஊட்டியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு:வழங்கும் விழா:கலெக்டர் பொ.சங்கர் தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      நீலகிரி

 

ஊட்டியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட பயிற்சி அரங்கில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமை தாங்கி பொங்கல் பரிசுத்தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்து பேசியதாவது:_இந்தியாவிலேயே ஏழை எளிய மக்களின் பசியை தீர்க்க விலையில்லா அரிசி வழங்கியது நமது தமிழக அரசுதான் என்றால் அது மிகையாகாது. விவசாயிகளிடம் அளவற்ற அன்பு கொண்டவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள். அதனால் தான் உழவர்களின் துயரத்தை போக்க உழவர் பாதுகாப்புத் திட்டத்தினை கொண்டு வந்தார். நீலகிரி மாவட்ட மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்ட மறைந்த முதலமைச்சர் அவர்கள் கடந்த 2014ம் ஆண்டு குன்னூரில் பொங்கல் பரிசினை தனது பொற்கரங்களால் வழங்கி தொடங்கி வைத்தார். அது போன்று ஒரு பெரிய விழா நடைபெறவில்லை.த•ழர் திருநாளான பொங்கல் தினத்தன்று தாய்வீட்டு சீதனமாக பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்புத்துண்டு, வேட்டி, சேலை என பொங்கல் பரிசு வழங்கி வருகிறது நமது த•ழக அரசு. த•ழக அளவில் 1 கோடியே 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க சுமார் 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் அரிசிக்கு ரூ.45 கோடியும், சர்க்கரைக்கு ரூ.72 கோடியும், கரும்புக்கு ரூ.27 கோடியும், முந்திரி, திராட்சை, ஏலக்காய் வாங்க ரூ.54 கோடியும், இதர பொருட்களுக்கு ரூ.2 கோடி என ரூ.200 கோடியை த•ழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.நமது மாவட்டத்தில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 54 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க ரூ.2.15 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை திங்கட்கிழமை சென்னையில் த•ழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இன்று(நேற்று) தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் கூறினார்.விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி., குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ஏ.ராமு, மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெள்ளி, மண்டல இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி, ஞிலகிரி மொத்த கூட்டுறவு விற்பனை பண்டக தலைவர் ராஜகோபால், என்.சி.எம்.எஸ்.தலைவர் கண்ணபிரான், ஞிலகிரி கூட்டுறவு நிறுவன தலைவர் கே.சந்திரன், ஊட்டி நகர கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்க தலைவர் எஸ்.கே.ஜி.சுரேஷ்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: