கோவை மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை, பொங்கல் பரிசு:அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      கோவை
2

 

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி நிரந்தர துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் பொங்கல் பரிசுப் பொருட்களும், சென்னை வர்தா புயலில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு (ம) சுகாதார பணிகளை சிறப்பாக மேற்கொண்ட துப்புரவுப் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டைகளையும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அவர்கள் வழங்கினார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில் " புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற வேண்டுமென்று பல்வேறு அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். இந்தியாவிலேயே தமிழகத்தை போல் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற திட்டங்கள் இல்லை. குறிப்பாக கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கும் சீருடைகள் மற்றும் பொங்கள் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. அதில் ஆண் துப்புரவு பணியாளர்களுக்கு அரைக்கை சட்டை ஒன்றும், முழுக்கால் பேண்ட்டு ஒன்றும், சீருடை தையற்கூலியாக ரூ.450-மும், தலைப்பாகை (துண்டு) ஒன்றும் மற்றும் ஒரு ஜோடி காலணிகளும் வழங்கப்பட்டன. இதேபோல பெண் துப்புரவு பணியாளர்களுக்கு சேலையுடன் கூடிய ஜாக்கெட்டு ஒன்றும், தையற்கூலியாக ரூ.100-மும் தலைப்பாகை (துண்டு) ஒன்றும் மற்றும் ஒரு ஜோடி காலணிகளும் வழங்கப்பட்டது. கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2740 துப்புரவு பணியாளர்களுக்கும் பொங்கள் பண்டிகையை முன்னிட்டு பரிசுப் பொருட்கள் வாங்கி வழங்கப்பட்டது. 2017-ம் ஆண்டு முதற்கட்டமாக பொங்கள் பண்டிகையை முன்னிட்டு ஆண் துப்புரவுப் பணியாளர்கள் 1770 நபர்களுக்கு அரைக்கை சட்டை ஒன்று, முழுக்கால் பேண்ட்டு ஒன்று, சீருடை தையற்கூலியாக ரூ.450-மும், தலைப்பாகை (துண்டு) ஒன்றும் மற்றும் ஒரு ஜோடி காலணிகளும் வழங்கப்பட்டன, இதற்கான செலவினம் ரூ.20,60,280- ஆகும். மேலும் பெண் துப்புரவுப் பணியாளர்கள் 970 நபர்களுக்கு சேலையுடன் கூடிய ஜாக்கெட்டு ஒன்றும், தையற்கூலியாக ரூ.100-மும் தலைப்பாகை (துண்டு) ஒன்றும் மற்றும் ஒரு ஜோடி காலணிகளும் வழங்கப்பட்டன, இதற்கான செலவினம் ரூ.7,64,360- ஆகும். மேலும், இதனைத் தொடர்ந்து நிரந்தர துப்புரவுப் பணியாளர்கள் 2740 நபர்களுக்கும் மேற்கண்ட பொருட்களுடன் பொங்கள் பரிசாக ஒவ்வொரு நிரந்தர துப்புரவுப் பணியாளர்களுக்கும் பச்சரிசி – 1 கிலோ, வெல்லம் - 1 கிலோ, நெய் - 100 கிராம், பாசிப்பருப்பு – 250 கிராம், முந்திரி – 25 கிராம், திராட்சை – 25 கிராம், ஏலக்காய் - 5 கிராம், மஞ்சள் கொத்து – 2 எண்ணிக்கைகள் மற்றும் கரும்பு – 2 எண்ணிக்கைகளும் வழங்கப்பட்டன, இதற்கான செலவினம் ரூ.7,97,340ஃ- ஆகும். ஆகமொத்தம் ரூ.36.21.980- செலவினத்தில் சீருடைகளும் பொங்கள் பரிசுப் பொருட்களும் வாங்கி வழங்கப்பட்டன. மேலும், கடந்த டிசம்பர் 2016-ம் ஆண்டு சென்னையில் "வர்தா புயல்" காரணமாக ஏற்பட்ட மழைவெள்ளம் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் கோவை மாநகராட்சி சார்பாக மீட்பு மற்றும் சுகாதார பணிகளில் ஈடுபட்டு சிறப்பாக பணியாற்றிய 300 துப்புரவுப் பணியாளர்கள், 4 ஆய்வாளர்கள் மற்றும் 10 மேற்பார்வையாளர்கள் ஆகியோர்களைப் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன்; மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ஜுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுகுட்டி ஏ.சண்முகம் அவர்கள், ஓ.கே.சின்னராஜ் அவர்கள், கஸ்தூரி வாசு அவர்கள், துணை ஆணையாளர் ப.காந்திமதி நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் மரு.எம்.சந்தோஷ்குமார், மண்டல உதவி ஆணையாளர்கள், சுகாதார அலுவலர்கள்; மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: