முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில் 6,10,063 பேருக்கு ரூ.6.71 கோடி மதிப்பில் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு: அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      கோவை

 

திருப்பூர்: தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரிசிபெறும் குடும்ப அட்டைகள் உள்ள 6,10,063 பேருக்கு ரூ.2.74கோடி மதிப்பில் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அவர்கள், மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி தலைமையில் உடுமலையில் 89,953 பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.இவ்விழாவில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி பேசியதாவது,தமிழக மக்கள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், தழிழ் நாட்டில் உள்ள 7.5கோடி மக்களின் நலனில் அக்கரைக் கொண்ட மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள்; தமிழக மக்கள் வாழ்க்கையிலும், பொருளாதரத்திலும் மேம்பாடு அடைய பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்தார்கள். தமிழக மக்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடிட சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கிட தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 1.80 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதில் 1கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை,இரண்டடி நீளம் கரும்புத்துண்டுடன் தலா 20 கிராம் உலர்ந்த திராட்சை,20 கிராம் முந்திரி மற்றும் 5 கிராம் ஏலக்காய் பொங்கல் பண்டிகைக்காக இன்று முதல் வழங்கப்படுகிறது. அத்துடன் விலையில்லா வேட்டி சேலைகளும் வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சாதனைக்குறள், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன்,கூட்டுறவு சங்கங்களின் இனைப் பதிவாளர் குமார்; உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்