காஞ்சிபுரம் மாவட்டத்தில் விலையில்லா வேட்டி-சேலை மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி வழங்கினார்

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      காஞ்சிபுரம்
kanchi

காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூர் வட்டம் தண்டலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.கஜலட்சுமி; விலையில்லா வேட்டி-சேலைகள் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினார்.

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு 8 லட்சத்து 56 ஆயிரத்து 052 குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி-சேலைகள் வழங்கப்படுகின்றன. மேலும் 6 லட்சத்து 44 ஆயிரத்து 442 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளும் வழங்கப்பட உள்ளன.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், இம்மாவட்டத்தில் செயல்படும் நியாயவிலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் 2 அடி நீல கரும்பு துண்டு ஆகியவைகள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை வரும் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு வழங்கப்படும். மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா வேட்டி-சேலைகள் வழங்கப்படும்.

 

இதன்படி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அரிசி அட்டை, ஏஏஓய் அட்டை, காவலர் அட்டை, வன அட்டை, இலங்கை தமிழர் அட்டை ஆகிய அட்டைகள் தகுதியானதாகும். இம்மாவட்டத்தில் செயல்படும் 1409 கூட்டுறவு நியாயவிலைக்கடைகள் மற்றும் இதர துறைகள் மூலமாக நடத்தப்படும் 78 நியாயவிலைக்கடைகள் மூலமாகவும் ஆக மொத்தம் 1477 நியாயவிலைக்கடைகள் மூலமாக பொங்கல் பரிசுத் ;தொகுப்பு வழங்கப்பட உள்ளன. அரிசி பெறும் அட்டைகள் 5 லட்சத்து 83 ஆரயித்து 163 குடும்ப அட்டைகளும், 59 ஆயிரத்து 462 ஏஏஓய் அட்டைகளும், 1817 காவலர் அட்டைகளும் ஆகமொத்தம் 6 லட்சத்து 44 ஆயிரத்து 442 மதிப்பிலான குடும்ப அட்டைகளுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின் படி பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பொங்கல் பரிசு தொகுப்பில் இம்மாவட்டத்தில் மொத்தம் 6 லட்சத்து 44 ஆயிரத்து 442 குடும்ப அட்டைகளுக்கும் பச்சரிசி 644 மெட்ரிக்டன், சர்க்கரை 644 மெட்ரிக்டன், முந்திரி 12.89 மெட்ரிக்டன், திராட்சை 12.89 மெட்ரிக்டன், ஏலக்காய் 3.22 மெட்ரிக்டன்னும், சுமார் 2 அடி நீளமுள்ள சுமார் 6.44 லட்சம் மதிப்பில் கரும்பு துண்டுகளும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

 

இம்மாவட்டத்தில் பொறுத்தவரையில் பொங்கல் பரிசுத் தொகுப்பிற்காக தமிழக அரசால் ரூபாய் 7.09 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி ஏழை-எளிய நடுத்தர மக்கள் அனைவரும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையினை சிறப்புடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்பட வேண்டும் என்ற பரந்த நோக்கத்தில் தமிழக அரசு இத்திட்டதினை அறிவித்துள்ளது.

 

தகுதியான குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக்கடைகளில் பொங்கல் பண்டிகை நாள் வரையில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பெங்கல் பரிசுத் தொகுப்பினை எவ்வித பெற்றுக் கொள்ள மாவட்டத்தின் நிர்வாகத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

நிகழ்ச்சியில் திருபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாசாபாத் பா.கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சா.பாபு வரவேற்புரையாற்றினார். காஞ்சிபுரம் சாரக துணைப்பதிவாளர் கோ.மாலதி நன்றியுரையாற்றினார். மாவட்ட வழங்கல் அலுவலர் வ.பவநந்தி, வட்டாட்சியர் எஸ்.நாகராஜன், நகர கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ஏ.குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: