முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்டத்தில் 34,835 பிளஸ் 1 வகுப்பு பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு ரூ.13 கோடி 46 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      வேலூர்

வேலூர் மாவட்டத்தில் உள்ள 425 அரசு உயர்நிலைமேல்நிலை மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் +1 பயிலும் 34,835 மாணவ மாணவிகளுக்கு ரூ.13 கோடி 46 இலட்சத்து 96 ஆயிரத்து 215- மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வேலூர் ஊரிஸ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி  வழங்கினார்இவ்விழாவிற்கு கலெக்டர் சி.அ.ராமன்,  தலைமை தாங்கினார்.இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ஜி.பார்த்தீபன் (சோளிங்கர்), ஆர்.பாலசுப்பிரமணி (ஆம்பூர்), ஜி.லோகநாதன் (கே.வி.குப்பம்), ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இவ்விழாவில்  வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-மறைந்தும் மறையாமல் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த  மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களால் 2001-2002 ஆம் வருடம் குறிப்பிட்ட பிரிவினை சேர்ந்த மாணவ மாணவிகளுக்காக துவங்கப்பட்டு பின்னர் 2005-2006 ஆம் ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் +1 பயிலும் மாணவ மாணவிகளுக்கு வழங்க ஏற்படுத்தப்பட்ட ஒரு உன்னதமான திட்டம் இந்த விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம். 2001 ஆம் ஆண்டு முதல் 2016 வரை தொடர்ந்து இத்திட்டம் மாணவ மாணவிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமபுரத்தில் உள்ள ஏழை எளிய மாணவ மாணவிகள் நகர்புரங்களுக்கும், தொலைவில் உள்ள பள்ளிகளுக்கும் காலதாமதமின்றி சென்றுவர இத்திட்டம் மாணவ மாணவிகளுக்கு செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக பெண்கள் பள்ளி படிப்பை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து பயில இத்திட்டம் அவர்களுக்கு ஒரு ஊக்கத்தை வழங்கி உள்ளது. மேலும் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு தாயாகவும், தந்தையாகவும் நின்று அவர்களின் கல்விக்கு அனைத்து விதமான உபகரணங்களையும் இலவசமாக வழங்கி வருகிறார்கள். ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டுமெனில் அந்நாட்டு மக்களுக்கான கல்வியும் சுகாதாரமும் தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும். அதனடிப்படையில் மறைந்த  முதல்வர் அம்மா  தொலை நோக்கு திட்டம் 2023 என்ற திட்டத்தை உருவாக்கி தமிழகத்தை கல்வியிலும், சுகாதாரத்திலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கி தந்துள்ளார்கள். வேறு எந்த தலைவரும் செயல்படுத்திடாத விலையில்லா மடிக்கணினிகள், சீருடைகள், காலணிகள்,  புத்தகங்கள் இதற்கும் மேலாக ஏழை மாணவர்கள் கல்லூரி கல்வியை தொடர ரூ.5000ஃ- வழங்கும் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு வழங்கி உதவி செய்துள்ளார்கள்.மேலும் கடந்த 2011-2016 வரை 5 ஆண்டுகளில் கல்வித்துறைக்கு மட்டும் ரூ.1,10,000 கோடி நிதியை ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். கடந்த ஆண்டு அரசு பள்ளியில் பயின்ற 31 மாணவர்கள் தகுதி அடிப்படையில் மருத்துவ படிப்பு படிக்க இடம் பிடித்துள்ளார்கள். இது போன்று தமிழக அரசு தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு அவர்களது வாழ்க்கை சிறக்க உறுதுணையாக என்றென்றும் இருக்கும். ஆகவே மாணவ மாணவிகள் தங்களுடைய கடமையை உணர்ந்து மறைந்த  முதல்வர் அம்மா  எதற்காக இத்திட்டங்களை உருவாக்கினாரோ அந்த எண்ணங்கள் நிறைவேறும் வகையில் பல்வேறு சாதனைகளை புரிய வேண்டுமென்று  வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.இவ்விழாவில் வருவாய் கோட்டாட்சியர் அஜய் சீனிவாசன்  நன்றியுரை ஆற்றினார்.                இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.பூபதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெய பிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிட நல அலவலர் பரமேஸ்வரி மாவட்ட கல்வி அலுவலர் மனோகரன், ஆவன் பெருந்தலைவர் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை) த.வேலழகன், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவர் டபுள்யு.ஜி.மோகன், வடவேலூர் கூட்டுறவு நகர கடன் சங்க தலைவர் எஸ்.நாகு (எ) நாகராஜன், நில வள வங்கித் தலைவர் சதீஷ்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்