முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிந்தாதிரிப்பேட்டை மற்றும் வளசரவாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட மாவா புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் கைது

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      சென்னை

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா என்ற போதை புகையிலை பொருட்கள், இதர புகையிலை பொருட்கள் மற்றும் போதை பாக்குகளை தயாரிப்பவர்கள், பதுக்கி வைத்து சப்ளை செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் .ஜார்ஜ், உத்தரவிட்டார். அதன் பேரில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணித்து, மேற்படி தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பவர்கள் மற்றும் தயாரிப்பவர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இதன் தொடர்ச்சியாக, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மாலை அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் இருந்தபோது, சந்தேகத்தின்பேரில், காயிதே மில்லத் கல்லூரி அருகில், பின்னி சாலை சந்திப்பில் உள்ள பீடா கடையை ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா என்ற புகையிலை பொருள் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதன்பேரில், மாவா புகையிலை பொருளை விற்பனை செய்த இந்தரஸ்குமார் (20), உத்திரபிரதேசம் என்பவரை கைது செய்தனர். விசாரணையில், இந்தரஸ்குமார், திருவல்லிக்கேணி, என்ற முகவரியில் தங்கி, அந்த வீட்டிலேயே மாவா பொருளை தயாரித்து கடையில் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இவர் கொடுத்த தகவலின்பேரில், இந்தரஸ்குமார் தங்கியிருந்த வீட்டில் சோதனை மேற்கொண்டு, 354 பாக்கெட்டுகள் கொண்ட 3 கிலோ மாவா,4 கிலோ சீவல் பாக்கு மற்றும் ஜர்தா புகையிலை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இந்தரஸ்குமார், விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.இதே போல், வளசரவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, ஆழ்வார் திருநகர், ஆற்காடு சாலை, ஆந்திரா வங்கி அருகில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட மாவா பொருளை விற்ற கடையின் உரிமையாளர் சுஜித் (36), பூந்தண்டலம், குன்றத்தூர் என்பவரை கைது செய்தனர். விசாரணையில், இவரது கடைக்கு சைலேந்தர்சிங் என்பவர் அவரது வீட்டில் மாவா பொருளை தயாரித்து சப்ளை செய்தது தெரியவந்தது. இவர் கொடுத்த தகவலின்பேரில், சைலேந்தர்சிங் (40), மேற்கு மாம்பலம் மற்றும் நண்பர் ஆதிசிவன் (46), போரூர், ஆகிய 2 பேரை கைது செய்தனர். மகேந்தர்சிங், வீட்டில் சோதனை மேற்கொண்டு, 200 மாவா பாக்கெட் கொண்ட 1 கிலோ மாவா, 1கிலோ பாக்கு மற்றும் ஜர்தா புகையிலை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சுஜித், சைலேந்தர்சிங் மற்றும் ஆதிசிவன் ஆகியோர், விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்