முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய மாபெரும் அரசுப் பொருட்காட்சி:அமைச்சர்கள் பி.தங்கமணி, டாக்டர்.வி.சரோஜா, கடம்பூர் ராஜு திறந்து வைத்தனர்

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் (தெற்கு) அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய மாபெரும் அரசுப் பொருட்காட்சி துவங்க விழா  நடைபெற்றது. இவ்விழாவில் கலெக்டர் மு.ஆசியா மரியம்  அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சென்னை செய்தி மக்கள் தொடர்பு துறையின் கூடுதல் இயக்குநர் (செய்தி) எஸ்.பி.எழிலழகன் அவர்கள் திட்ட விளக்கவுரையாற்றினார். இவ்விழாவிற்கு நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பாஸ்கர், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில்  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி அவர்கள்,  சமூகநலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா அவர்கள்,  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு அரசு பொருட்காட்சியினை துவக்கி வைத்தார்கள்.இவ்விழாவில்  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமையேற்று பேசும்போது தெரிவித்ததாவது,அரசு பொருட்காட்சியானது மாநிலம் முழுவதும் 11 மாவட்டங்களில் நிரந்தரமாக அரசு பொருட்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மறைந்த  தமிழக முன்னால் முதலமைச்சர் அம்மா அவர்கள் நகராட்சிப்பகுதியிலும் அரசு பொருட்காட்சி நடத்திட ஆணையிட்டதன் அடிப்படையில் தற்போது 12 மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தையும் சேர்த்து அரசு பொருட்காட்சி நடத்த ஆணையிடப்பட்டுள்ளது. அந்தவகையில் நாமக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக அரசு பொருட்காட்சி மிகச்சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அரசு பொருட்காட்சியானது பொதுமக்கள் எளிதில் அரசு நலத்திட்டங்கள் அறிந்து கொள்வதற்கு  அதனைப் பெறுவதற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி அரங்குகளில் விளம்பர தட்டிகளாகவும், காட்சிப்பொருளாகவும் காட்சிப்படுத்தி வைத்துள்ளனர். தமிழகத்தில் மறைந்த  தமிழக முன்னால் முதல்வர் அம்மா அவர்கள் தமிழக மக்களுக்காக நிறைவேற்றி தந்துள்ள மக்கள் நலத்திட்டங்களால் தமிழகமே சிறந்த வளர்ச்சியைப் பெற்று வருகின்றது. தமிழகத்தில்  அம்மா அவர்கள் நிறைவேற்றித்தந்த திட்டங்களை மத்திய அமைச்சர்கள் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் பிற மாநிலங்களும் பிற நாடுகளும் வியந்து பாராட்டுகின்ற திட்டங்களை தமிழகத்தில் தந்து  உலகமே வியந்து போற்றும் ஒப்பற்ற தலைவியாக  அம்மா அவர்கள் விளங்கி வந்தார்கள். தமிழக மக்களின் இதயங்களில் நீங்காத இடம் பெற்றுள்ள  அம்மா அவர்களின் ஆசியோடு, நாமக்கல் மாவட்டத்தில் அரசு பொருட்காட்சி மிகச்சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கி தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறுகின்ற அரசுப்பொருட்காட்சியில் பொதுமக்கள் கண்டு களிக்க ள்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே நாமக்கல் மாவட்ட வரலாற்றில் தன்முறையாக மறைந்த  தமிழக முன்னால் முதல்வர் அம்மா அவர்களின் நல்ஆசியோடு நாமக்கல் மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ள அரசு பொருட்காட்சியினை பொதுமக்கள் அனைவரும் கண்காட்சியினை பார்த்து யன்பெறுவதோடு, அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை தெரிந்து பயன்பெற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்