முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 50 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் 369 விலையில்லா மடிக்கணினிகள்:அமைச்சர் பா.பாலகிருஷ்ணாரெட்டி வழங்கினார்

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவியர் 260 நபர்களுக்கும், கெலமங்கலம் அரசு தொழிற்நுட்ப கல்லூரி சேர்ந்த 109 மாணவ மாணவியருக்கும் மொத்தம் 369 நபர்களுக்கு ரூ. 50 லட்சத்து 34 ஆயிரத்து 440 மதிப்பிலான  தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா கிருஷ்ணகிரி அரசு தொழிற்நுட்ப கல்லூரி வளாகத்தில் நேற்று (11.01.2017) நடைபெற்றது.  இதில் கலெக்டர் சி.கதிரவன்  தலைமையுரை ஆற்றினார்.  சட்டமன்ற உறுப்பினர்கள் மனோரஞசிதம் நாகராஜ், சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.   அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பொ.ரவீந்திரன் வரவேற்புரையாற்றினார்.பின்பு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி  கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பேசியதாவது.தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தினை மறைந்த முதல்வர் அம்மா அவர்கள்தான் திட்டத்தை கொண்டுவந்தார்கள்.  தமிழகத்தை முன்னோடி மாநிலமாக கொண்டுவர வேண்டும் என்பதற்காகவும், கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் கல்லூரியில் படிக்கும் மாணவ ஃ மாணவியர்களுக்கு இந்த விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்கள். அதனடிப்படையில்   மேற்படிப்புக்கு தேவையானவற்றை இந்த மடிக்கணினியின் மூலமாகவே தெரிந்து கொள்வதோடு,   இந்த மக்கணினியின் மூலம் ஓரிடத்திலிருந்து உலகச் செய்திகள் அனைத்தையும் அறிந்துக் கொள்ள முடியும்.  ஆகவே இன்று மட்டும் கிருஷ்ணகிரி பாலிடெக்னிக் மாணவ, மாணவியர்கள் 260 நபர்களுக்கும், கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 109 நபர்களுக்கு என ஆக மொத்தம் 369 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.50,34,440ஃ- மதிப்பிலான மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது.  இவற்றை பெற்று மாணவ, மாணவியர்கள் தங்களது கல்வியை உயர்த்திக் கொள்வதோடு, வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டு, பொருளாதார வளர்ச்சியடைந்து பயன் அடைய வேண்டும் என  கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி பேசினார்.இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சூ.கிருஷ்டி, தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.என்.ஏ.கேசவன், தருமபுரி மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.தென்னரசு, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ஆர்.ஜெயபால்,  பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர் எப்சிபாஏஞ்சல் ;துரைராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்