ஜல்லிக்கட்டு விவகாரம் பிரதமர் அலுவலகத்தில் அ.தி.மு.க. எம்.பி.கள் மனு

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      இந்தியா
admk request(N)

 புதுடெல்லி  - அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா அறிவுறுத்தலின்படி, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜல்லிக்கட்டை நடத்திட அவசரச் சட்டம் இயற்றிட வலியுறுத்தி பிரதமர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மத்திய அமைச்சர்  அனில் மாதவ் தவேவையும் நேரில் சந்தித்து அவசரச் சட்டம் இயற்றிட வலியுறுத்தினர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்திட ஏதுவாக, ஜல்லிக்கட்டை நடத்திட ஏதுவாக அவசரச் சட்டம் இயற்ற, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா அறிவுறுத்தலின்படி, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் அலுவத்தில் நேற்று மனு அளித்தனர். மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் அனில் மாதவ் தவேவை நேற்று நேரில் சந்தித்தும் அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: