முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேதாரண்யத்தில் பொங்கலையொட்டி அரசின் விலையில்லா வேட்டி, சேலைகளை கைத்தறித்துறை அமைச்சர் மணியன் வழங்கினார்

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

வேதாரண்யம் எஸ்.கே.எஸ். திருமண அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக் கான வேட்டி சேலைகளை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்;. இவ்விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி தலைமை வகித்தார் கோட்டாட்சியர் கண்ணன் வரவேற்றார்

பொதுமக்களுக்கு வேட்டி சேலைகளை வழங்கி கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் பேசியதாவது:- தமிழகத்தில் அரிசி அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பதாரர்களுக்கும், ஒரு வேட்டி, சேலை தொகுப்பு வழங்கப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரிசி அட்டை வைத்திருக்கும் 3 லட்சத்து 27 ஆயிரம்; குடும்பங்களுக்கு வேட்டி, சேலை தொகுப்பு வழங்கப்படுகிறது.

 

இவ்விழாவில்; 2776 குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலை தொகுப்பு வழங்கப்படுகிறது. தமிழ் நாட்டில் வேளாண்மை துறைக்கு அடுத்து நெசவுத் தொழில் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் 2017 பொங்கல் பண்டிகைக்காக சுமார் 1 கோடியே 62 லட்சத்து 42 ஆயிரத்து 717 சேலைகளும,; 1 கோடியே 62 லட்சத்து 24 ஆயிரத்து 223 வேட்டிகளும் தயார் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதே போன்று மாவட்டம் முழுவதும் உள்ள அரிசி அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கலுக்கு முன்னதாக வேட்டி, சேலை தொகுப்பு வழங்கப்பட்டுவிடும். தமிழக மக்கள் அனைத்து நலமும், வளமும் பெற்று பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் இந்த திட்டங்களை பொதுமக்கள் பயன்படு;த்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

 

இவ்விழாவில்; ஒன்றிய செயலாளர் கிரிதரன், நகரச் செயலாளர் எழிலரசு, முன்னாள் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவானந்தம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளர் அம்பிகாதாஸ், முன்னாள் தொகுதி இணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றியத் துணைச் செயலாளர் சரவணன், கூட்டுறவு வங்கித் தலைவர் நமசிவாயம், வேதாரண்யம் வட்டாட்சியர் இளங்கோவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago